Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, July 25, 2017

நீர்கொழும்பு கொச்சிக்கடை நகை கடையில் ஆறு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நகைகள் திருட்டு குடும்பமாக வந்து திருட்டு: சிசிரிவி கமராவில் பதிவு

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகை விற்பனை நிலையம்  ஒன்றில் ஆறு இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான  13 பவுணுக்கு மேற்பட்ட நகைகள் பொருட்களை கொள்வனவு செய்வது போன்று வருகை தந்த நான்கு பேர் அடங்கிய குழுவொன்றினால் திருடிச் செல்லப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு கொச்சிக்கடை சிலாபம் வீதியில் அமைந்துள்ள மாருதி ஜுவலர்ஸ் என்ற நகை கடையிலேயே இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற அன்று குறித்த நகை கடைக்கு ஆண் ஒருவரும், மூன்று பெண்களும் நகைகள் வாங்குவது போன்று வந்துள்ளனர். அவர்களில் 13  மற்றும் 18 வயதுடைய இரு பெண்கள் இருந்துள்ளனர்.  இவர்களுடன் வருகை தந்த ஆண் கடையில் இருந்த நகைப் பெட்டியை திருடி தான் அணிந்திருந்த சாரத்திற்குள் மறைத்து வைப்பது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை இரவு கடையிலிருந்த நகைகளின் இருப்பை உரிமையாளர் பார்த்தபோதே நகைகள் களவு போனவிடயம் தெரிய வந்துள்ளது.
செய்ன் 1, கை செய்ன் 1, சிறிய நெக்லஸ் 1, பெரிய தோடு 2, 12 ஜோடி டஸல், 15 ஜோடி ஜிப்ஸி, 14 கல் மோதிரம், 48 ஜோடி சிறிய கராபு, மீன் டிசைன் பென்டன் 1, வெள்ளி மோதிரம் 2, சிறிய பெண்டன் 1 ஆகியன திருடிச் செல்லப்பட்டுள்ளன. களவு போன நகைகளின் பெறுமதி 6 இலட்சத்து 3 ஆயிரத்து 750 ரூபா என கடையின் உரிமையாளர் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளரான எம். புஸ்பநாதன் தெரிவித்ததாவது,
வெள்ளிக்கிழமை மாலை 4.35  மணியளவில்  நகைகளை திருடிச் சென்றவர்கள் நகைகளை கொள்வனவு செய்வது போன்று வந்துள்ளனர். இதன்போது கடையில் ஊழியர்  ஒருவரே இருந்தார். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போன்றே காணப்பட்டனர். அவர்களில் பெண் நகைகளை வாங்குவது போன்று பார்வையிட்டுள்ளார். அவர்களுடன் வந்த ஆண் இதன்போது நகைகள் அடங்கிய பெட்டியை திருடி தான் அணிந்து வந்த சாரத்திற்குள் மறைத்து வைத்துள்ளார்.  அவர்களுடன் கூட வந்த இரு சிறுமி;யர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக திருடுவதை காணாமல் இருக்கும் வகையில் சூழ்ந்து நின்றுள்ளனர்.  பின்னர் அவர்கள் எந்தவித நகைகளையும்  கொள்வனவு செய்யாமல் மாலை 5.12 மணியளவில்  கடையிலிருந்து வெளியேறியுள்ளனர். இவைகள் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.  இவர்கள் முச்சக்கர வண்டியொன்றிலேயே வந்துள்ளதாக தெரிய வருகிறது. அடுத்த நாள் சனிக்கிழமை (22)  சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார்.
சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.



1 comment:

  1. We're looking for kidney donors in India or across Asia for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete