Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, August 29, 2017

குரணை பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு அமர்த்தி கசிப்பு தயாரித்த நபர் கைது

நீர்கொழும்பு குரணை பிரதேசத்தில் ஆடம்பர வீடொன்றை    திங்கட்கிழமை (28-8-2017) மாலை சுற்றிவளைத்து அங்கு கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த  நபர் ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கசிப்பு மற்றும் கோடா அடங்கிய பரல்களை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 24 வயதுடையவராவார். இவர் குரணை, ரஜ மாவத்தையில்  ஆடம்பர வீடொன்றை வாடகைக்கு எடுத்து மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் அறையொன்றில்    இரகசியமான முறையில் கசிப்பு தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். வீட்டு உரிமையாளர் வெளிநாடொன்றில் பணியாறிறி வரும் நிலையில் அவரது தந்தை வீட்டை
சந்தேக நபருக்கு வாடகைக்கு வழங்கியள்ளார்.




நீர்கொழும்பு பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் நேற்று திங்கட்கிழமை  (28) மாலை  திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் நான்கு கோடா பரல்கள், 20 கசிப்பு போத்தல்கள் என்பவற்றையும் கசிப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும்  கைப்பற்றியுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரின் வழிகாட்டலில் ஊழல் ஒழிப்புப்  பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் காமினி களுபான தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment