Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, September 15, 2017

நீர்கொழும்பு பெரியமுல்லை செல்லக்கந்தை பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்து பிரதேசவாசிகள் பாதிப்பு

   நீர்கொழும்பு பெரியமுல்லை செல்லக்கந்தை வீதியில் அமைந்துள்ள பாலத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமை (14) இரவு உடைந்து விழுந்துள்ளது.  இதன் காரணமாக பிரதேசவாசிகள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
'தெபா எல'  ஆறு ஓடும் வழியில்  இந்த பாலம் அமைந்துள்ளது. தெபா எல  ஆறு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக சுத்தம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக பாலத்தின் கீழ் ஜப்பான் தாவரம் மற்றும் குப்பைகள் தேங்கி நின்று பாலம் உடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பிதேசவாசிகள் தெரிவிக்கையில்

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தெபா எல சுத்தம் செய்யப்படவில்லை. இதனை சுத்தம் செய்வதற்கு பல இலட்சம் ரூபா பணம் ஒதுக்கப்பட்டதாக கடந்த அரசாங்க காலத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சுத்தம் செய்யப்படவில்லை. வியாழக்கிழமை இரவு பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் பயணிப்பது ஆபத்தானது. எனவே பாலத்;தின் வழியாக பெரிய வாகனங்கள் பயணம் செய்வதை தடுத்து நிறுத்தியுள்ளோம். இந்த பாலத்தின் வழியாக நீர்கொழும்பின் பல பிரதேசஙகளுக்கும் செல்ல முடியும். தற்போது பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், தொழிலுக்கு செல்வோர், பிரதேசவாசிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.








 தெபா எல சுத்தம் செய்யப்டாமை காரணமாக கடந்த காலத்தில் நுளம்பு பெருகி பலர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டார்கள் . நீர்கொழும்பு மாநகர சபை மற்றும் கட்டானை பிரதேச சபை ஆகியன இந்த பிரதேசம் தமது அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசம் அல்ல என் கூறி வருகிறது. இதன் காரணமாக இந்த இரண்டு நிறுவனங்களும் தெபா எலவை சுத்தம் செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது பாலம் உடைந்து விழுந்ததன் பின்னர் இந்த பிரதேசத்தில் உள்ள குப்பைகளை மட்டும் அகற்றினர். பாலத்தை புதிதாக நிர்மாணிக்க வேண்டும். கடந்த 30 வருடங்களுக்கு முன்னரே இந்த பாலம் கட்டப்பட்டது என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment