Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, September 22, 2017

இரு கிராம சேவகர் பிரிவுகளின் வழக்குகளை நீர்கொழும்பு நீதிமன்றத்திலிருந்து மாற்றி மினுவாங்கொடை நீதிமன்றில் விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு சட்டத்தரணிகள் சங்கத்தினர் எதிர்ப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் அமைந்துள்ள கிராம சேவகர் பிரிவு உட்பட இரண்டு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வழக்குகளை நீர்கொழும்பு நீதிமன்றில் விசாரணை செய்யாமல் மினுவாங்கொடை நீதிமன்றில் விசாரணை செய்வதற்கு கடந்த செவ்வாய்க்கிழமை (19-9-2017) முதல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிராகவும் இதனை மேற்கொள்வதற்கு  நடவடிக்கை எடுத்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராகவும் வியாழக்கிழமை (21) நீர்கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தினர்   ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நீர்கொழும்பு நீதிம்ன்ற கட்டடத் தொகுதியில்  சட்டத்தரணிகளின் ஓய்வு அறையில் நடைபெற்றது.
இதன்போது நீர்கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சரித்த ஜயநாத்த, செயலாளர் சட்டத்தரணி நில்மினி மெடோன்ஸா, சங்கத்தின் நிறைவேற்று அங்கத்தவர்களான  சட்டத்தரணி இந்திக்க த சில்வா, சட்டத்தரணி  ரொபர்ட் ஹீன்  கொந்த மற்றும் பொது மக்களின் சார்பில் மக்கள் பிரதிநிதிகளான மேல் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோஸ் பெர்னாந்து, ரொயிஸ் பெர்னாந்து ஆகியோர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

இதன்போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களாவன,


கடந்த அரசாங்கக் காலத்தில் எடுத்த சிலரது தனிப்பட்ட தேவைகளுக்காக எடுத்த தீர்மானத்தின்படி கட்டுநாயக்க விமான நிலையம் அமைந்துள்ள கிராம சேவகர் பிரிவு உட்பட இரண்டு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வழக்குகளை நீர்கொழும்பு நீதிமன்றில் விசாரணை செய்யாமல் மினுவாங்கொடை நீதிமன்றில் விசாரணை செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  இந்த இரு பிரதேசங்களும் நீர்கொழும்பு நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளாகும். இதனை முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ செயல்படுத்த நடவடிக்கை எடுத்தார். கடந்த 19 ஆம் திகதி முதல் இந்த கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள வழக்குகள் மினவாங்கொடை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.


 இதன்காரணமாக பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு நீதிமன்ற கட்டடத் தொகுதி 90 கோடி ரூபா செலவில் சகல வசதிகளுடன் அமைந்த கட்டடத் தெர்குதியாகும். குட்டுநாயக்க விமான நிலையம், நீர்கொழும்பு சிறைச்சாலை, நீர்கொழும்பு வைத்தியசாலை, சுதந்திர வர்த்தக வலயம்;,  என பல்வேறு பிரதான இடங்களை அண்மித்ததாக நீர்கொழும்பு நீதிமன்றம் அமைந்துள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் இலகுவாக நீதிமன்றத்திற்கு வந்து செல்லக் கூடியதாக இருந்தது. சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோர், விமான நிலையத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளின் போது கைது செய்யப்படுவோர், மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும்  வெளிநாட்டவர்கள் இந்த நீதிமன்றில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர். சிறைச்சாலையும்; 50 மீற்றர் தூரத்திலேயே அமைந்துள்ளது. மினுவாங்கொடை நீதிமன்றத்திற்கு இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதன் காரணமாக பாதுகாப்பின்மை, அதிக செலவு, கால விரயம், பொது மக்களுக்கு அசௌகரியம் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.


குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை விசாரணை செய்யும்போது சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் வழக்குகளுக்கு வருகின்றனர். மினுவாங்கொடையில் அமைந்துள்ள வசதி குறைந்த நீதிமன்றங்களில்; வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் போது எமது நாட்டின் கௌரவமும் பாதிக்கப்படுகிறது. நீர்கொழும்பு நீத்மன்றத்தில் வசதிகள் உள்ளன. தேவையாயின் இங்குள்ள கட்டடத்தில் மேலும் ஒரு நீதிமன்ற பிரிவை அமைத்துக் கொள்ளலாம்.
தீர்மானங்களை எடுக்கும் போது மக்களுக்கு நலன் பயக்கும் விதத்தில்  தீர்மானம் எடுக்க வேண்டும். ஒரு சிலரது தேவைகளுக்காக அல்ல. நீதிமன்ற வழக்குகள் கால தாமதமாவதாக பொதுவாக குற்றச்சாட்டு உள்ளது.  இந்நிலையில் மினுவாங்கொடை போன்ற குறைந்த வசதிகள் உள்ள நீதி;மன்றத்திற்கு வழக்குகள் கொண்டு செல்லப்பட்டால் என்னவாகும்?
ன்று சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியதோடு உரிய நடவடிக்கை எடுக்கவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
மக்கள் பிரதிநிதிகளான மேல் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோஸ் பெர்னாந்து, ரொயிஸ் பெர்னாந்து ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் இந்த விடயம் தொடர்பாக அரச உயர் மட்டத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும்,  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment