Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, September 5, 2017

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக நீர்கொழும்பில் வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி வைப்பது தொடர்பாக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

நீர்கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலைக கட்டுப்படுத்தும் வகையில் நகர மத்தியில் எதிர்வரும்  வியாழக்கிழமை முதல் வாகனங்களை வீதியில் தரித்து (நிறுத்தி) வைப்பதற்கு புதிய நடை முறையை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்தை  நீர்கொழும்பு  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுடன்  இணைந்து மேற்கொள்கிறது.
 போக்குவரத்துப் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தும் நிகழ்வு இன்று காலை நீர்கொழும்பு குரூஸ் வீதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகே,
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர்,  பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துப் பொலிஸார் கலந்து கொண்டனர்.

 இத்திட்டத்தின் கீழ் வாரத்தில் ஒற்றை மற்றும் இரட்டை தினங்களில் நகரில் உள்ள குறிப்பிட்ட சில வீதிகளில் வாகனங்களை தரித்து வைப்பதற்கான  (வலது மற்றும் இடது பக்கங்களில்) அனுமதி கடுமைப்படுத்தப்படவுள்ளன. இதற்கு முன்னர் இந்த திட்டம் நடைமுறையில் இருந்தாலும் இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது கடுமைப்படுத்தப்படவில்லை.



இது தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகே தெரிவிக்கையில், நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து தில்லன்தூவ வரையான வீதி , டீன்ஸ் சந்தியிலிருந்து பிரதான வீதி வழியாக நீதிமன்றம் வரையான வீதி, குரூஸ் வீதியிலிருந்து பிரதான வீதி வழியாக டீன்ஸ் வீதி வரையான வீதியோரங்களில் ஒற்றை மற்றும் இரட்டை தினங்களில் வாகனங்களை நிறுத்தி வைப்பது தொடர்பான சட்டம்  எதிர்வரும்  வியாழக்கிழமை முதல் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளது.  இதனை மீறுவோருக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி வைப்பது தொடர்பான காட்சிப் பலகைகள் வைக்கப்;படவுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment