Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, October 7, 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதி மரணமான சம்பவம் திவுலபிட்டி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரிக்கு 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில்  திடீரென்று சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமான கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட திவுலபிட்டி பொலிஸ் நிலையத்தின்  பதில் பொறுப்பதிகாரி இன்று நீர்கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில்  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆஜர் செய்யப்பட்ட போது சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை (10-10-2017) விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மஜிஸ்ட்ரேட் ருச்சிர வெலிவத்த நேற்று (6) உத்தரவிட்டார்.
பதில் குற்றவியல் பொறுப்பதிகாரி சமன் பிரியங்க என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.

நீர்கொழும்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை  நேற்று கைது செய்து நேற்று மன்றில் ஆஜர் செய்தனர்.
திருட்டுச் சமப்வம் தொடர்பில் கைது  செய்ப்பட்ட  ஹுனுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான கைதி ஒருவர்  திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மினுவாங்கொடை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு  எதிர்வரும் 10  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டடிருந்தார். இந்நிலையில் திடீரென்று சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைதி மரணமாகியுள்ளார். 


பொலிஸாரின் தாக்குதல் காரணமாக கைதி மரணமாகியுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் பதில் குற்றவியல் பொறுப்பதிகாரி சமன் பிரியங்க கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கைதி மரணமான சம்பவம் நீர்கொழும்பு சிறைச்சாலையில்  இடம்பெற்றுள்ளதால் இந்த வழக்கை மினுவாங்கொடை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நீர்கொழும்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், அங்கு வழக்கு இடம்பெற்றால் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் எனவும், அத்துடன்  சந்தேக நபரை அடையாளம்  காண்பதற்காக அணி வகுப்பு நடத்த வேண்டாம் எனவும் , அவர் பிரதேசத்தில் நன்கு அறியப்பட்ட ஒருவர் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை (10-10-2017) விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment