Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, October 28, 2017

நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியில்; 1992 ஆம் ஆண்டு கல்வி பயின்று விலகியவர்களின் வெள்ளி விழா நிகழ்வு

நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியில்  (Maristella College) 1992 ஆம்  ஆண்டு கல்வி பயின்று விலகியவர்களின் குழுவுக்கு 25 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு  வெள்ளி விழா  நிகழ்வாக பல்வேறு  வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதுதொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (27-10-2017) இரவு நடைபெற்றது.




இந்நிகழ்வில் நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவரான இலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவரும் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரருமான  கிரஹம் லெப்ரோய் உட்பட பலர் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு விளக்கமளித்தனர்.
மாரிஸ்டெல்லா கல்லூரியில் 1992 ஆம் ஆண்டுகளில் கல்வி கற்ற குழுவில் 162 பேர் உள்ளனர்.  இவர்களில் பலர் இன்று தேசிய அளவில் பிரகாசிக்கின்றனர். கலைத்துறை . விளையாட்டுத்துறை, வர்த்தகத் துறை, வைத்தி;யத்துறை, பொறியியல் துறை, சட்டத்துறை, அரசியல் உட்பட பல்வேறு துறைகளில் இவர்கள் பிரகாசித்து வருகின்றனர்.

News - M.Z.Shajahan




 தமக்கு 12 ஆண்டுகள் கல்வி கற்ற ஆசிரியர்களை கௌரவித்தல், கல்லூரிக்கு உதவுதல்,  குழு அங்கத்தவர்களின் விபரங்கள்  படங்கள் மற்றும் விபரங்கள் அடங்கிய நினைவு மலர்  ஒன்றை உயர்ந்த தரத்தில் வெளியிடல்,  குழுவில் அங்கம் வகிப்போருக்கு  இலவச காப்புறுதி திட்டம்  ஒன்றை மேற்கொள்ளல்,  அங்கத்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் . சமூகத்துக்கு உதவுதல்  ஆகிய நோக்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், டிசம்பர் மாதம் முதலாம் திகதி வெள்ளி விழா நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் ஊடகங்களுக்கு நிகழ்வில் விளக்கமளிக்கப்பட்டது.







No comments:

Post a Comment