Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, October 28, 2017

நீர்கொழும்பு துங்கல்பிட்டியவில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட துன்கல்பிட்டிய பிரதேசத்தில் (27-10-2017) அன்று வெள்ளிக்கிழமை காலை புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் 491 புதிய பொலிஸ் நிலையங்களை திறந்து வைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 491 ஆவது பொலிஸ் நிலையமாக இந்த பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
மேல் மாகாண வடக்குக்கு பகுதிக்கு பொறுப்பான  சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

 இந்நிகழ்வில் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனாநாயக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகே, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார வுட்லர், நீர்கொழும்பு பிராந்தியத்தைச் சேர்ந்த பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





 நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமத தலைவர்கள் ஆசி வழங்கினர்.
 புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள துங்கல்பிட்டிய பொலிஸ் நிலையம் 9. 3 சதுர கிலோ மீட்டர் பரப்ளவு கொண்ட அதிகரத்திற்குட்பட்டதாகும். 32 ஆயிரத்து 500 பொது மக்கள் இந்த பிரதேசத்தில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments:

Post a Comment