Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, November 22, 2017

11 வயது மாணவனின் கன்னத்தில அறைந்து காயம் ஏற்படுத்திய ஆசிரியர் கைது: நீர்கொழும்பில் சம்பவம்

நீர்கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள தேசிய பாடசாலையைச்; சேர்ந்த 11 வயதுடைய மாணவன் ஒருவரை தாக்கியசம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் நேற்று (21) நீர்கொழும்பு  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 கொட்டதெனியாவ பிரதேசத்தில் வசிக்கும் விஞ்ஞான பாட ஆசிரியரே சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவராவார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
கடந்த 15 ஆம் திகதி தரம் ஆறில் கற்கும் மாணவர்கள் சிலருக்கிடையில் நண்பகல் வேளையில் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் அதனை விசாரிக்க சென்ற வேளையில் குறித்த மாணவனின்கன்னத்தில் அறைந்துள்ளார்.

வீட்டுக்குச் சென்ற மாணவன் தனது காது வலிப்பதாகவும் ஆசிரியர் தனது கன்னத்தில் அறைந்ததாகவும்பெற்றோரிடம் கூறியுள்ளார். அடுத்த நாள் பெற்றோர் மாணவனை அழைத்துக் கொண்டு பாடசாலைக்குச் சென்று இதுதொடர்பாக விசாரித்துள்ளனர். இதுதொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் இபாதிக்கப்பட்ட மாணவனை சுகப்படுத்துவதற்கு உதவுவதாக ஆசிரியர்கள் சிலரும் பெற்றோர்கள் சிலரும் மாணவனின் பெற்றோரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து  நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மானை அழைத்துச் சென்ற பெற்றோர் தமது பிள்ளை கீழே விழுந்ததன் காரணமாக காதில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
தமது மகனை சுகப்படுத்துவதற்கு உதவி புரிவதாக அளித்த வாக்குறுதி மீறப்பட்டதை அடுத்து பெற்றோர் நேற்றையதினம்  (21) பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இன்று (22) மன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.


No comments:

Post a Comment