Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, November 22, 2017

மத்திய வங்கி பிணை முறி தொடர்பாக நான்தான் முதன் முதலாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு செய்தேன். - மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர

மத்திய வங்கி பிணை முறி தொடர்பாக நான்தான் முதன் முதலாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு செய்தேன். மக்கள் ஊழல் அற்ற ஆட்சியையே எதிர்ப்பார்க்கிறார்கள். வரலாற்றில் முதல் தடைவையாக ஜனாதிபதி அவர்கள் அதிகாரமிக்க ஆணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்;. இதன்மூலமாக பல்வேறு விடயங்கள் வெளியாகி வருகின்றன என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
  நீர்கொழும்பு பலகத்துறை பிரதேசத்தில்  மீனவர்களுக்கான  மீனவ சமூக  மத்திய நிலையம்    ஒன்றை மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று  செவ்வாய்க்கிழமை (21) மாலை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்ககையிலேயே இவவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நீர்கொழும்;பு அமைப்பாளர் லலித் டென்ஸில், நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1973 ஆம் ஆண்டு கட்டப்பட்ட  மீனவ சமூக  மத்திய நிலையம் கொழும்பு துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலமாக  எட்டு இலட்சம் ரூபா செலவில்    புனரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.



இங்கு மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  மேலும் கூறியதாவது
மத்திய வங்கி பிணை முறி தொடர்பாக நான்தான் முதன் முதலாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு செய்தேன். மக்கள் ஊழல் அற்ற ஆட்சியையே எதிர்ப்பார்க்கிறார்கள். வரலாற்றில் முதல் தடைவையாக ஜனாதிபதி அவர்கள் அதிகாரமிக்க ஆணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்;. இதன்மூலமாக பல்வேறு விடயங்கள் வெளியாகி வருகின்றன. பிரதமரும் ஆணைக்குழுவின் விசாரணக்கு  ஆஜராகியுள்ளார். அதுதொடர்பாக நான் மகிழ்ச்;சியடைகிறேன். அதேபோல் அமைச்சர்கள் பலரும் ஆணைக் குழுவின் முன் சாட்சியமளித்துள்ளனர். நாட்டின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்ட நல்ல ஒரு நடவடிக்கையாக இதனை நான் கருதுகிறேன். குற்றவாளிகள்; தண்டிக்கப்பட வேண்டும்



ஸ்ரீலங்கா சுதந்திரக கட்சியை நாங்கள் இரண்டாக உடைக்க விரும்பவில்லை. எதிர்வரும் தேர்தலில்  எமது கட்சி மாபெரும் வெற்றி அடையும். ஜனாதிபதியுடன் இணைந்து நாங்கள் இதுதொடர்பாக கலந்துரையாடி உள்ளோம்.  இனிமேல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. எரிபொருள் விலையும் அதிகரிக்கப்படமாட்டாது என்றார்.





No comments:

Post a Comment