Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, December 22, 2017

நீர்கொழும்பு கட்டுவை ரயில் கடைவையில் காரின் மீது ரயில் மோதியதில் 16 வயது மாணவி பலி: மூவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் கட்டுவை ரயில் கடைவையில் கொழும்பு திசையை நோக்கி வந்து கொண்ருந்த ரயிலில்  காரில் மோதியதில் சிறுமி ஒருவர் மரணமாகியுள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (22) முற்பகல் 10.26 மணியளவில் கட்டுவை ரயில்வே கடைவையில் இடம்பெற்றுள்ளது.



சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் கட்டுவை ரயில்வே கடைவையை கடக்கும்போது அபாய சமிக்ஞையை மீறி சென்ற கார் பயணித்துள்ளதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.







 குறித்த ரயில் கடைவையில் ரயில்வே தடுப்பு பலகை கிடையாது, அபாய ஒலி எழுப்பப்படுவதுடன்; சிகப்பு சமிக்ஞை விளக்கு எரியும்.
இந்த விபத்து சம்பவத்தில்  நீர்கொழும்பு பெரியமுல்லை, எட்மிலஸ் வீதியைச் சேர்ந்த  மிலிசா லெம்பர்ட் என்ற 16 வயது சிறுமி பலியாகியுள்ளார்.
விபத்து இடம்பெற்ற காரில் தாயும் மகளும் மகளின் இரு நண்பிகளும்; கட்டுவை பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்புக்கு செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரை ஓட்டிச் சென்ற திம்பிரிகஸ்கட்டுவ  வித்தியாலய மாவத்தையைச் சேர்ந்த  சுமித்ரா சுபானி (38 வயது) , அவரது மகளான கிரிஹானா விசாயல் குருகுல சூரிய (16 வயது) மற்றும் நண்பிகளில் ஒருவரான கட்டுவை வீதியைச் சேர்ந்த ஜெனீபர் சிஹாரா மிரால்  (16 வயது) ஆகியோரே காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஜெனீபர் சிஹாரா மிரால்  (16 வயது) மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக கார் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. காரின் சாரதி ஆசனத்திற்கு பின் பக்கமாக பயணித்த சிறுமியே சம்பவத்தில் பலியாகியுள்ளார். 
 கொச்சிக்கடை பொலிஸார்  சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 இதேவேளை . சம்பவம் இடம்பெற்ற லரயில்வே கடைவையில் இதற்கு முன்னர் பல விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ரயில்வே கேட் இல்லாமையே விபத்து ஏற்பட பிரதான காரணம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

News – M.Z.Shajahan

No comments:

Post a Comment