Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, February 6, 2018

எனது பிரஜா உரிமையை அவ்வளவு இலேசில் இல்லாமலாக்க முடியாது - முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

 எனது பிரஜா உரிமையை இல்லாமல் செய்வதாக கூறுகிறார்கள். அதனை அவ்வளவு இலேசாக செயய முடியாது. அதிவேக வீதிகளை நிர்மாணித்தமை , யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை, வீதி அபிவிருத்தி வேலைகளை செய்தமை, பாடசாலைகளை அபிவிருத்தி செய்தமை போன்ற பல்வேறு விடயங்களை  நான் மேற்கொண்டமை காரணமாகவா எனது பிரஜா  உரிமையை இல்லாமல் செய்யப் போவதாகக் கூறுகிறார்கள்? என்று  பாராளுமன்ற உறுப்பினரும்  முன்னாள் ஜனாதிபதியுமான  மகிந்த ராஜபக்ஷ கூறினார்.
கட்டுநாயக்காவில் திங்கட்கிழமை  (5-2-2018) மாலை  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,


இந்த அரசாங்கம் சாதாரண மக்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. அரசு கடந்த மூன்று வருட காலமாக பொய் சொல்லி வருகிறது. தொடர்ந்தும் பொய் சொல்ல முயற்சி செய்கிறது.
பிரதமரின் அடியாட்;கள்களை ஜனாதிபதி திருடர்கள் என்கிறார். ஜனாதிபதியின் ஆட்களை ரணிலின் அடியாட்கள் திருடர்கள் என்கிறார்கள்.  பிணைமுறி மோசடி காரணமாக வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு  நீதியான ஆணைக் குழுக்கள் தேவை.  அரசியல் ஆணை குழுக்கள் அல்ல.
எனது பிரஜா உரிமையை இல்லாமல் செய்வதாக கூறுகிறார்கள். அதனை அவ்வளவு இலேசாக செயய முடியாது. அதிவேக வீதிகளை நிர்மாணித்தமை , யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை, வீதி அபிவிருத்தி வேலைகளை செய்தமை, பாடசாலைகளை அபிவிருத்தி செய்தமை போன்ற பல்வேறு விடயங்களை  நான் மேற்கொண்டமை காரணமாகவா எனது பிரஜா  உரிமையை இல்லாமல் செய்யப் போவதாகக் கூறுகிறார்கள்.
நாட்டை துண்டாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு  தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தப் போவதாகக் கூறுகிறார்கள்.  நாட்டை துண்டாடினால் நிரந்தரமாக குரோதம் ஏற்படும்.  நாட்டை துண்டாடுவதறகு விரோதமாக எதிர்வரும் தேர்தலில் வாக்களியுங்கள்.


இன்று ஊடக சுதந்திரம்  வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் பிரதமர் பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர்களின் பெயரை சுட்டிக்காட்டி  எச்சரிக்கை செய்கிறார். இன்று ஊடக சுதந்திரம் கிடையாது.
நாட்டு வளங்களை விற்கிறார்கள். நுரைச்சோலையை விற்பனை செய்யப் போகிறார்கள். இந்த நாட்டை  விற்பனை செய்யும் நிலைக்கு அவர்கள் வந்துள்ளார்கள். அதிவேக வீதியில் இனிமேல் பயணிக்கும் போது வேறு யாருக்காவது கட்டணம் செலுத்த வேண்டி வரும். புணம் அறவிட்டு அதிவேக வீதியை பராமரிப்பதற்கு பதிலாக இலாபமீட்டுவதற்காக அதனை விற்பனை செய்வார்கள்.
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்திக்காக எனது ஆட்சி காலத்தில் பத்தாயிரம் இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. அதற்கு என்ன நடந்ததோ தெரியாது. நாட்டில் பொருளாதார முகாமைத்துவம் கிடையாது.  அது அவர்களுக்கு தெரியாது என்று தெரிவித்தார்.



No comments:

Post a Comment