Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, March 27, 2018

நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் ஐவர் பணத்திற்காக கட்சியை காட்டிக்கொடுத்தமை தொடர்பாக ஜனாதிபதி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் - இணை அமைப்பாளர் லலித் டென்ஸில்


 நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடடு வெற்றி பெற்ற  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் ஐந்து பேர் பணத்தை பெற்றுக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்து கட்சியை  கட்சியை காட்டிக்கொடுத்துவிட்டனர். இந்த உறுப்பினர்களுக்கு எதிராக ஜனாதிபதி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீர்கொழும்பு இணை அமைப்பாளர்களில் ஒருவரும் மாநகர சபை உறுப்பினருமான   லலித் டென்ஸில் தெரிவித்தார்.

நீர்கோழும்பு மாநகர சபைக்கான மேயர் தெரிவின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் ஐந்து பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த உறுப்பினருக்கு   வாக்களித்தமை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாடு  அவரது கட்சி காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது. இதில் மாநகர சபை தேர்தலில்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இணை அமைப்பாளர் லலித் டென்ஸில் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது
தேத்தல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே எமது இணை அமைப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.எம். சகாவுல்லா பணத்திற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார். இதன் மூலம் 'மக்களுக்கு சேவை செய்வதே மனிதனின் பிரதான பணி' என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரின்; கொள்கைக்கு அவர் மாற்றமாக நடந்து  கொண்டு அவர் கட்சி வேட்பாளர்களை பலிகொடுத்துள்ளார். அந்த ஐந்து உறுப்பினர்களுக்கும்  அவர் தேவையான பணத்தையும் வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் என்பதை பயமின்றி என்னால் கூறமுடியும். எனக்கு அதனை நிரூபிக்க முடியும்.


எமது கட்சியிலிருந்த முன்னாள் பிரதி அமைச்சர்கள் இருவர் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் எமது கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை 18 ஆயிரமாக குறைத்தனர்.  நான் மிகவும் கடினமாக உழைத்து வாக்குகளின் எண்ணிக்கையை 9661 ஆக அதிகரித்துள்ளேன். கம்பஹா மாவட்டத்தில்  நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் எமது கட்சி மூன்று வட்டாரங்களை வெற்றி கொண்டுள்ளது.
எமது கட்சி உறுப்பினர்கள்  பணத்தை பெற்றுக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளித்தமை தொடர்பாக கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு திட்டமிட்ட கொள்ளையாகும். இது நாடறிந்த கொள்ளையாகும். அவர்களுக்கு இலஞ்சமாக வழங்கப்பட்ட பணம் எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
 எனக்கு  மேயர் பதவி வழங்குவதாகவும்  பிரதி மேயர் பதவி வழங்குவதாகவும்இ மில்லியன் கணக்கான பெறுமதியுடைய வாகனம் ஒன்றை வழங்குவதாகவும்,  பல மில்லியன் ரூபாய் பணத்தை வழங்குவதாகவும் என்னுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த தலைவர்கள்  சிலர் பேரம் பேசினர். நான் அதற்கு இணங்கவில்லை. கட்சிக்காகவும்   கட்சித் தலைமைக்காகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க  என்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்காகவும் கட்சி ஆதரவாளர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையிலும் நான் அந்த பேரம் பேசுதலுக்கு இணங்கவி;ல்லை.
எனது தலைமைத்துவத்திற் கீழ்படியாமல் வேறு கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்த ஐந்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் எமது கட்சி மாபெரும் வீழ்ச்சியை சந்திக்கும்.
தேர்தலுக்கு முன்னர்  நீர்கொழும்பு தொகுதியில் போட்டியிடும் எமது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் ஊழலுக்கு எதிராக இரத்தத்தினால் சத்தியப்பிரமாணம் செய்தனர். அதுதொடர்பான துண்டுப் பிரசுரத்தையும் அன்று நாங்கள் எமது கட்சி வேட்பாளர்களின் படத்துடன் வெளியிட்டு வாக்கு கேட்டோம். இன்று வெற்ற பெற்ற ஆறு பேரில் ஐந்து பேர்  பணத்தை பெற்றுக் கொண்டு ஊழல் செய்துள்ளனர். எனவே இதுதொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணத்திற்கு விலை போகாத எனது முன்னுதாரணத்தை ஏனையவர்களும் பின்பற்ற வேண்டும். அப்போதூன் நாடு முன்னேறும். எமது கட்சியும் வெற்றிபெறும் என்று நான் பெருமையுடன் கூறுகிறேன் என்றார்.



No comments:

Post a Comment