Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, April 4, 2018

நீர்கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வின்போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கை: வீதியில் ஆர்ப்பாட்டம்


நீர்கொழும்பு மாநகர சபையின்  கன்னி அமர்வு இன்று (4) காலை இடம்பெற்ற போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாநகர சபைக்கு முன்பாக பிரதான வீதியில்  நின்று எதிர்ப்பு கோசம் எழுப்பினர். அத்துடன் அவர்கள் எதிர்ப்பு சுலோகங்கள் எழுதப்பட்ட இட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளரும், முன்;னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும். மாநகர சபை உறுப்பினருமான ரொயிஸ் பெர்னாந்து தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்;பில்; தெரிவாகியுள்ள 19 உறுப்பினர்களும்  இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் தெரிவித்தனர்.

மாநகர சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்னாந்து இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
 நடைபெற்று முடிந்த தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்  19 உறுப்பினர்கள் தெரிவாகினர். எமது கட்சி 29 வட்டாரங்களில் 19 வட்டாரங்களை கைப்;பற்றியது. நாங்கள்  ஸ்ரீலங்கா சுதந்திரக்; கட்சியின் சார்பில் தெரிவாகியுள்ள ஆறு உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு  மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு முடிவு செய்திருந்தோம். இதற்கு ஜனாதிபதியும் இணங்கியிருந்தார். ஆயினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்; கட்சியின் ஆறு உறுப்பினர்களில் ஐந்து பேர்   பெருந்தொகை பணத்தைப் பெற்றுக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  ஆட்சி அமைப்பதற்கு  ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இதற்கு பிரதான காரணம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்; கட்சியின் இணை அமைப்பாளர்களில் ஒருவரான சகாவுல்லா ஆவார். அவர் பணத்திற்காக ஐந்து உறுப்பினர்களையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்க வைத்துள்ளார். இதன் மூலமாக அவர் முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்துள்ளார். முஸ்லிம் சமூகத்தை விற்பனை செய்துள்ளார்.
அங்கு மாநகர சபை உறுப்பினர்களான சஜித் மோகன், முஹம்மத் நஸ்மியார் ஆகியோரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.




 மாநகர சபை உறுப்பினர் முஹம்மத் நஸ்மியார் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,  நான் கடந்த முப்பது வருட காலமாக  மாநகர சபை உறுப்பினராக உள்ளேன்.   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் ஒருவரே காரணமாக உள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்; கட்சியின் இணை அமைப்பாளர்களில் ஒருவரான சகாவுல்லா பணத்திற்காக இதனை செய்து எமது சமூகத்திற்கு துரோகம் இழைத்துள்ளார்.  இந்த முறை நீர்கொழும்பு முஸ்லிம் மக்கள் மகிந்த ராஜபக்ஸவின் கட்சிக்கு எதிராக வாக்களித்தனர்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களில் ஐந்து பேர் மகிந்த ராஜபக்ஸவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளித்து எமது மக்களுக்கு துரோகம் புரிந்துள்ளனர்.  இதற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்றார்.

மாநகர சபை உறுப்பினர சஜித் மோகன் அங்கு  கருத்து தெரிவிக்ககையில் கூறியதாவது,



தோல்வியடைந்த கட்சி பணத்தை கொடுத்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளது. இது கவலை தரும் விடயமாகும். மக்களின் கருத்துக்கு மாற்றமான வகையில் மாநகர சபைக்கான ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.  மேயர்  தெரிவு இடம்பெற்றுள்ளது என்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்;த தயான் லான்ஸா நீர்கொழும்பு மாநகர மேயராகவும்  ஸ்ரீலங்கா சுதந்திரக்; கட்சியைச் சேர்ந்த எம்.ஏ.இஸட். பரீஸ் பிரதி மேயராகவும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment