Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, April 22, 2018

தீ விபத்தினால் கடலை கடைக்கு பலத்த சேதம் நீர்கொழும்பில் சம்பவம்


 நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கடலை விற்பனை செய்யும் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடையில் உள்ள பொருட்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட நஸ்டம் ஏற்பட்டுள்ளது.
 பிரதான வீதியில் அமைந்துள்ள  வி.ஆர் கிரேம் ஸ்டோர்ஸ் எனற கடையிலேயே தீ விபத்து ஏற்பபட்து.
விபத்துச் சம்பவம்   இன்று ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் 3.30 மணியளவில் ஏற்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். விபத்து எற்பட்டவுடன் நீர்கொழும்பு தீ அணைக்கும் படைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

விபத்து காரணமாக கடையின் சமையலறை பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.   கேஸ் அடுப்பு ,  உபகரணங்கள்  மற்றும் பொருட்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 




சம்பவம் தொடர்பாக  கடையில் பணியாற்றும்  எஸ்.பி. ஜெயந்தி என்பவர் தெரிவிக்கையில் கூறியதாவது, 
கடலை பொரித்துக் கொண்டிருக்கும் போது தாச்சியிலிருந்த எண்ணை கீழே கொட்டியது. இதன்போது எண்ணெய் கேஸ்  அடுப்பில்பட்டு தீப்பற்றியதுடன் அருகிலிருந்த எண்ணெய்யிலும் தீ பரவி இந்த விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேல் நஸ்டம் ஏற்பட்டுள்ளது. முழமையான நஸ்டம் அதனை விட அதிகமாக இருக்கும் என்றார்.
சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




No comments:

Post a Comment