Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, June 11, 2011


நீர்கொழும்பில் ஒருவர் வாளினால் வெட்டி கொலை
மாநகர சபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு



                                                   கொலை செய்யப்பட்டவர்
             கொலை செய்யப்பட்டவரின் மனைவி    
நீர்கொழும்பு கட்டுவ பிதேசத்தில் 42 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் ஒருவர் வாளினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவரின் வலது கால் வெட்டப்பட்டு அதிகம் இரத்தம் வெளியேரியதன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்
இச் சம்பவம் நேற்று (11) இரவு 7 மணியளவில் இடம் பெற்’றுள்ளது.10 பேரை கொண்ட குழுவினர் இச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினரான மார்க் சுஜித் என்பவரே தனது கணவனை வாளினால் வெட்டியதாகவும் கொலை செய்யப்பட்டவரின் மனைவி பொலிசாரிடம் வாக்கு மூலமளித்துள்ளார்.
இச் சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்டவரின் சகோதரருக்கு சொந்தமானதும் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளதுமான தங்கு விடுதி ஒன்று (restaurant) குற்றம் சாட்டப்பட்டுள்ள குழுவினரால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைளை மேற் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment