Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, August 15, 2011


 உத்தேச ஓய்வூதிய திட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 
காயமடைந்தவர்களுக்கு நஷ்டயீடு வழங்குமாறு கோரி நீர்கொழும்பு நீதிமன்றின் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை



கடந்த மே மாதம் 30 ஆம் திகதி கட்டுநாயக்க சுதந்திர வர்த்க வலய ஊழியர்கள் உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய ஆர்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற் கொண்ட தாக்குதல் காரணமாக காயமடந்த ஊழியர்களுக்கு நஷ்டயீடு வழங்குமாறு கோரி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றின் முன்பாக இன்று திங்கட்கிழமை முற்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய ஆர்பாட்டத்தின் போது, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாக தொழிற்சாலை ஊழியரான ரொசேன் சானக்க (22 வயது) என்ற இளைஞர் பலியானார்.இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதன்போதே நீதிமன்றிற்கு வெளியில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை அமைதியான முறையில் இடம் பெற்றது.
ரொசேன் சானக்கவின் மரணத்திற்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும், ஓய்வூதிய திட்டத்தை இல்லாது ஒழித்த தொழிலாளர்களுக்கு நன்றி, காயமடைந்த ஊழியர்களுக்கு நஸ்டயீடு வழங்கு என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைகளில் ஏந்தியிருந்தனர்.
பின்னர் இது தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் நீர்கொழும்பு நகர மத்திக்குச் சென்று பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.

No comments:

Post a Comment