Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, August 26, 2011


செஞ்சிலுவை சங்கமும் லயன்ஸ் கழகமும் மாணவர்கள் தொடர்பில் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தம்
பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவி தொடர்பான உபகரணங்கள் மற்றும் பயிற்சி வழங்கல், பாடசாலைகளில் வீதிப் போக்குவரத்து  பிரிவை அமைத்து அதற்கான பயிற்சி வழங்கல் ஆகியவை தொடர்பாக கம்பஹா மாவட்ட  செஞ்சிலுவை சங்கமும் லயன்ஸ்கழக மாவட்ட 306 பி1 பிரிவும் இணைந்து செயற்பட உள்ளன.
இதற்கான  கூட்டு ஒப்பந்தமொன்றை (Joint Humanitarian Projects) இரு அமைப்புக்களும் இன்று செய்து கொண்டன.
இந்நிகழ்வு இன்று முற்பகல் 10 மணியளவில் நீர்கொழும்பு  கோல்டன் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்வில் கம்பஹா மாவட்ட  செஞ்சிலுவை சங்கம் மற்றும் லயன்ஸ் கழக மாவட்ட 306 பி1 பிரிவு என்பவற்றின் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்
லயன்ஸ் கழக மாவட்ட 306 பி1 பிரிவின் சார்பில் அதன் தலைவர் லயன் பிரியந்த பெர்னாண்டோவும், கம்பஹா மாவட்ட  செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் அன்ரன் விக்டோரியாவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இத்திட்டம் தொடர்பாக கம்பஹா மாவட்ட  செஞ்சிலுவை சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி ருவன் அபேவர்தன அங்கு விளக்கமளித்தார்.
ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் கொழும்பு முதல் யாழ்பாணம் வரையில் வலயக் கல்வக் காரியாலயங்கள் ரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் பாடசாலைகளுக்கு இதன் காரணமாக நன்மைகள் கிடைக்கும் எனவும், மாணவர்கள் மத்தியில் விபத்துக்கள் ஏற்படுவதை குறைப்பதற்காகவும் முதலுதவி தொடர்பாக பயிற்சிகள் வழங்குவதற்காகவும்,ஆரோக்கியம் தொடர்பில் மாணவர்கள் கவனம் செலுத்துவதற்காகவும், பாடசாலைகளில்




No comments:

Post a Comment