புகைபிடிக்கும் காட்சிகள் தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு புதிய நிபந்தனை
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைபிடிக்கும் மற்றும் மதுபானம் அருந்தும் காட்சிகளை மறைக்கும் முறை செப்டம்பர் முதலாம் திகதி முதல் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .
புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வருவதாக புகைபிடித்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வருவதாக புகைபிடித்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புகைபிடித்தல் பழக்கத்திலிருந்து இலங்கை மக்களை விடுவிப்பதற்காக உழைத்துவரும் ஜீவக்க மன்றம் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
பழைய முறைமை நீக்கப்பட்டு முதலாம் திகதி முதல் புதிய முறைமை அமுலுக்கு வருகிகிறது என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைப்பிடித்தல் காட்சிப்படுத்தப்படும் சமயங்களில் புகைபிடித்தல் பாதிப்புக்கள் தொடர்பான எச்சரிக்கை கொண்ட அறிவிப்புக்கள் காண்பிக்கப்படும் எனவும் இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment