Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, August 29, 2011


'பிரான்ஸ் நாட்டின் இலங்கையர்கள்' பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு உதவி
யுத்தத்தின் போது கால்களின் ஒரு பகுதியை இழந்த (அங்கவீனமடைந்த) இராணுவ வீரர்களுக்கு 'பிரான்ஸ் நாட்டின் இலங்கையர்கள்' என்ற அமைப்பினர் ஐம்பது இலட்சம் ருபா பெறுமதியான உதவிகளை செய்தனர்.
இதற்கான நிகழ்வு 25-8-2011 அன்று நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு செயற்கை கால்களும் வீட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டது.அத்துடன் இந்த அமைப்பினரால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் சிலரது வீடுகளும் புனரமைப்பு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
படம்-1 பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் ஒருவருக்கு பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன வீட்டு புனரமைப்புக்கான உதவித் தொகை வழங்கும் காட்சி
படம்-2  இராணுவ வீரர் ஒருவரின் தாயாருக்கு வீட்டு உபகரணங்கள் வழங்கப்படு;ம் காட்சி


No comments:

Post a Comment