Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, June 16, 2014

மண்ணெண்ணெய் மானியத்தையும் நிலுவையையும் வழங்குமாறு கோரி மீனவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

கடந்த 12 மாத காலமாக வழங்கப்படாதுள்ள சிறு மீன்பிடித்துறை மீனவர்களுக்கான  மண்ணெண்ணெய் மானியத்தை தொடர்ந்து வழங்குமாறும், இதுவரை வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை வழங்குமாறும் கோரி  நீர்கொழும்பு மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒன்றை நடத்தினர்.
நீர்கொழும்பு கடற்கரைத் தெரு சாந்த ஜோசப் தேவாலயத்திலிருந்து காலை 9.30 மணிக்கு பேரணி ஆரம்பமானது. கடற்கரைத் தெருவிலிருந்து பிரதான வீதி வழியாக, கிறீன்ஸ் வீதிக்கு வந்து அங்கிருந்து சென் ஜோசப்
வீதிவழியாக நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியை அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்;;, அங்கு மாநகர சபைக்கு முன்பாக 20 நிமிடங்கள் வரை எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர். புpன்னர் அங்கிருந்து 20 மீற்றர் துரத்தில் அமைந்துள்ள தம்மிட்ட தேவாலயத்திற்கு முன்பாக நீர்கொழும்பு கொழும்பு பிரதான வீதியின் கொழும்புக்கு செல்லும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.









நீர்கொழும்பு  கொச்சிக்கடை முதல் கெபுன்கொடை வரையுள்ள சிறு மீன்பிடித்துறை மீனவர்கள் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாடத்தில் கலந்து கொண்டனர்.
மண்ணெண்ணெய் விலையை குறை, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்று, மாற்று நிவாரணம் தேவையில்லை, ஜனாதிபதியே வாக்குறுதியை காப்பாற்றுங்கள், மீனவர்களுக்கு காப்புறுதி தேவையில்லை, மீனவர்கள் மரணப் பாதையில், மீன் இல்லாத உணவு மந்த போசணை போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை அவர்கள் ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்பு கோசங்களையும் எழுப்பினர்.

இது தொடர்பாக மீனவர் சங்க பிரிதிநிதி நாமல் பெர்னாந்து கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் மீனவர்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகிறது. மண்ணெண்ணெய் மானியத்தை வழங்குவதாகக் கூறி கடந்த 12 மாத காலமாக எங்களை ஏமாற்றினர். ஜனாதிபதி அவர்;கள் வாக்குறுதி அளித்தபடி  மாதத்திற்கு 9375 ரூபா மானியம் கடந்த 12 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ளது. அந்த வகையில் மீனவர் ஒருவருக்கு ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 500 ரூபா அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டியுள்ளது.; மீன்பிடித்துறை அமைச்சரும் அவரது பிரதி  அமைச்சரும்  பொய் வாக்குறுதிகளை மீனவர்களுக்கு வழங்குகின்றனர்.
மண்ணெண்ணெய் மானியத்திற்கு பதிலாக மாற்றீடாக மீன்பிடி உபகரனங்களை மீனவர்களுக்கு பலாத்காரமாக வழங்க முயற்சிக்கின்றனர்.  எங்களுக்கு மாற்றுத் தீர்வு தேவையில்லை. நாங்கள் கேட்பது மண்ணெண்ணெய் மானியத்தை மாத்திரமே. எமது போராட்டத்தடன் வடக்கு கிழக்கு மீனவர்களும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
  மானியம் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எமது போராட்டம் விஸ்தரிக்கப்படும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என்றார்.
















No comments:

Post a Comment