தனது தந்தையை பார்ப்பதற்கு ஓட்டுத் தொழிற்சாலைக்குச் சென்ற நான்கு வயது பிள்ளை
ஒன்று கிணற்றில் மூழ்கி பலியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கழமை பகல் 12 மணிக்கும் ஒரு மணிக்கும்
இடையில் கொச்சிக்கடை, உடங்காவல் பிரதேசத்தில் ஓட்டுத்
தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
மலிந்து தில்சான் என்ற மூன்று வருடங்களும் 10 மாதங்களுமான ஆண்
குழந்தையே பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.
சிறுவனின் தந்தையும் தாயும் கொச்சிக்கடை , உடங்காவல் பிரதேசத்தில்
தமது வீ;டுக்கருகில் அமைந்துள்ள
ஓட்டுத் தொழிற்சாலைகள் இரண்டில் தொழில் செய்து வருகின்றனர். இரண்டு
தொழிற்சாலைகளும் அருகில் உள்ளவைகளாகும்.
சம்பவத்தில் இறந்த சிறுவன் அன்றைய தினம் பாலர் பாடசாலைக்கு சென்று பாடசாலை
முடிந்த பிறகு தனது தாயார் வேலை செய்யும்
ஓட்டுத் தொழிற்சாலைக்குச் சென்று தாயாரிடம் உணவு கேட்டுள்ளார். தாயார் தான் உணவு
தயாரிக்கவில்லை எனவும் தந்தையிடம் சென்று
கேட்குமாறு பிள்ளையிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் சிறுவன் அங்கிருந்து பாதை மாறிச் தந்தை வேலை செய்யும் ஓட்டுத்
தொழிற்சாலைக்குச் சென்று தந்தையிடம் உணவு கேட்டுள்ளார். தந்தையும் உணவு இல்லை
என்று கூறவே சிறுவன் அங்கிருந்து சென்றுள்ளார்.
ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தந்தை பிள்ளையை காணாது தேடியுள்ளார். புpன்னர் அந்த
தொழிற்சாலையில் அமைந்துள்ள கிணற்றில் அவர் பாய்ந்து பார்த்த போது அவரது காலில்
பிள்ளை தட்டுப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்ந ஒருவர் கிணற்றில்
பாய்ந்து இறந்த நிலையில் பிள்ளையை வெளியே எடுத்துள்ளார்.
குறித்த கிணற்றின் சுற்றுமதில் நிலத்திலிருநது அரை அடி உயரத்திற்கே
கட்டப்பட்டுள்ளது எனவும், அந்த கிணறு 60 அடி ஆளமானது எனவும் விசாரணையின் போது
தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவத்தில் இறந்த பிள்ளையின் பிரேத
பரிசோதனையை நீர்கொழும்பு மாவட்ட
வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் நாமல் பெர்னாந்து
நடத்தினார்.
நீரில் மூழ்கி முச்சுத் திணறலால் ஏற்பட்ட மரணம் இதுவென பிரேத பரிசோதணை
அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொச்சிக்கடை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்
No comments:
Post a Comment