நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து பாய்ந்து
நோயாளி ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான் நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.;
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு வீதி, கட்டுவெல்லேகம பிரதேசத்தைச்
சேர்ந்த 25 வயதுடைய சமன் குமார என்ற
இளைஞரே வைத்தியசாலையின் மாடியிலிருந்து பாய்ந்துள்ளவராவார்.
வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள நான்காம் வார்டில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில், அவர் மாடியலிருந்து வெளியே
பாய்ந்துள்ளார். பின்னர் படுகாயமடைந்த நிலையில் அவர் கொழும்பு தேசிய
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிய வருகிறது.
நீர்கொழும்பு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர.;
No comments:
Post a Comment