கடந்த 12 மாத காலமாக வழங்கப்படாதுள்ள மண்ணெண்ணெய் மானியத்தை தொடர்ந்து வழங்குமாறும், இதுவரை வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை வழங்குமாறும் கோரி நீர்கொழும்பு சிறு மீன் பிடித்துறை மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை தொடர்ந்து , அன்று மாலை முதல்; தமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரி நீர்கொழுமபு மாநகர சபை முன்றலில்
சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு நீர்கொழும்பு கத்தோலிக்க மதத்
தலைவர்கள் சிலரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.
தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை
சத்தியாகிரகப் போராட்டம் தொடரும் என மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, நீர்கொழும்பு சிறு மீன்பிடித்துறை
மீனவர்கள் இன்று கடலுக்கு செல்வில்லை. இதன் காரணமாக நகரில் மீனுக்கு தட்டுப்பாடு
காணப்பட்டது.
இதேவேளை, கொழும்பு அதிமேற்றி ராணியார்
மல்கம் ரஞ்சித் அவர்கள் இது தொடர்பாக
விடுத்துள்ள அறிக்கை சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்
முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment