நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவு
மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வும்
பரிசளிப்பும் நேற்று செவ்வாய்க்கிழமை (24-2-2015)
கல்லூரி மைதானத்தில்
அதிபர் எம்.எம்.எம்.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி.
பெர்னாந்து, பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.ஸி.பி. பெர்னாந்து,
உதவிக் கல்விப்
பணிப்பாளர் எஸ்.பிரபா (தமிழ் மொழிப் பாடசாலைகள்) ஆகியோர் அதிதிகளாகக் கலந்து
சிறப்பித்தனர்.
ஜெஸ்மின், லோட்டஸ் ,
ரோஸ்,
ஓக்கிட் ஆகிய இல்லங்களின்
சார்பில் பங்கு கொண்ட ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பலவேறு நிகழ்ச்சிகளிலும் தமது
திறமைகளை வெளிப்படுத்தினர். அணிவகுப்பு, உடற்பயிற்சிக் கண்காட்சி,
விநோத உடைப் போட்டி
உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளின் முடிவில் லோட்டஸ் ,
ரோஸ்,
ஓக்கிட் ஆகிய இல்லங்கள்
முறையே முதலாம், இரண்டாம்,
மூன்றாமிடங்களைப்
பெற்றுக்கொண்டன.
படங்களில் முதலாமிடம் பெற்ற லோட்டஸ் இல்லத்திற்கு
நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி. பெர்னாந்து,
வெற்றிக்கிண்ணம்
வழங்குவதையும், இரண்டாம் இடம்பெற்ற ரோஸ் இல்லத்திற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர்
பி.ஸி.பி. பெர்னாந்து கிண்ணம் வழங்குவதையும் மூன்றாம் இடம்பெற்ற ஓக்கிட்
இல்லத்திற்கு உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.பிரபா கிண்ணம் வழங்குவதையும்,
அருகில் பாடசாலை
அதிபர் உட்பட முக்கியஸ்த்தர்கள் நிற்பதையும், போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்களையும் காணலாம்.
No comments:
Post a Comment