கடந்த மேல்
மாகாண சபை தேரத்ல் காலத்தில் தன்மீது அவதூறாக உரையாற்றியும் கருத்துக்கள்
தெரிவித்தும் வந்தமைக்கு எதிராக பிரபல
சிங்கள திரைப்பட நடிகரும் பிரதி அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்காவுக்கு எதிராக மேல்
மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா தொடர்ந்துள்ள வழக்கு நேற்று திங்கட்கிழமை (23) இரண்டாவது
தடைவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கை எதிர்வரும் ஜுன் மாதம் 8 ஆம் திகதிக்கு
நீர்கொழும்பு மாவட்ட நீதமின்ற மேலதிக நீதவான் ஏ.எம்.என்.பி. அமரசிங்க
உத்தரவிட்டார்.
தனக்கு எதிராக
போதைப் பொருள் விற்பனை அவதூறு கூறியிருந்ததாகவும் தனக்கு தனிப்பட்ட ரீதியிலும் அரசியல் ரீதியிலும்
அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில்
பிரதிவாதியான பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா
தொடர்ந்து கருத்து தெரிவித்து
வந்தமைக்கு எதிராக முறைப்பாட்டாளரான மேல்
மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா இந்த வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
பிரதிவாதியின்
சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்த
முறைப்பாடு தொடர்பாக பதில் தெரிவிக்க பிரதிவாதிக்கு அனுமதி வழங்குமாறு
கேட்டபோதே நீதவான் இந்த வழக்கை
எதிர்வரும் ஜுன் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்ககு எடுப்பதாக உத்தரவிட்டார்.
வழக்கின்
முடிவில் நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் மேல் மாகாண
அமைச்சர் நிமல்லான்ஸாவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்காவும் கருத்து தெரிவித்தனர்.
மேல் மாகாண
அமைச்சர் நிமல்லான்ஸா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
எனது பெயருக்கும் புகழுக்கும் அபகீர்த்தி
ஏற்படுத்தும் வகையில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா தொடர்ந்து கருத்து
தெரிவித்து வருவதை தடுக்கவே இந்த வழக்கை தாக்கல் செய்தேன். இன்று அவருக்கு கால்நடை
வளர்ப்பு அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சு மூலமாக அவர்
நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். அவர் பசுமாடுகளைப் பார்த்துக் கொண்டு பால்
உற்பத்தியை அதிகரிக் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து அவர் இன்னொருவரின்
புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசக்கூடாது. அடுத்த பாராளுமன்ற தேர்தல்
தொகுதி ரீதியில்
இடம்பெறவுள்ளது. அந்த தேர்தலில் அவர் என்னோடு போட்டியிட்டு பார்க்கட்டும்; . அவர் நிச்சயம்
தோல்வியை தழுவுவார். கம்பஹா மாவட்டத்தில் எந்த தேர்தல் தொகுதியில் என்னுடன்
போட்டியிட்டாலும்; அவர் தோல்வியடைவார். அவர் ஒரு தொகுதியை தேடிக் கொள்ள வேண்டும் என்றார்.
இது தொடர்பாக
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா
ஊடகங்களுக்கு பதிலளிக்கையில் கூறியதாவது,
மேல் மாகாண
அமைச்சர் நிமல்லான்ஸா விடுத்துள்ள சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். அடுத்த
பாராளுமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடுமாறு சவால் விடுத்துள்ளார்.
முதலில் அவருக்கு அந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்பது
கேள்விக்குறியாகவுள்ளது. ஜனாதிபதி நுகோகொடை பொதுக்கூட்டத்திறகு சென்றவர்களை
எச்சரித்திருக்கிறார்;. என்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிடப்
போவதாகக் கூறும் அவருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்குமா என்பது
கேள்விக்குறியாக உள்ளது. நான் போதைப் பொருள், எத்தனோல்,
கஞ்சா போன்றவைகளை விற்பனை செய்யாமல்
நகர மக்களுக்கு பால் வழங்க முடியுமாக
இருந்தால் அதுநல்லதாகும். என்றார்.
No comments:
Post a Comment