இரண்டு
மோட்டார் சைக்கிள்கள்; நேருக்கு நேர் மோதியதில் நீர்கொழும்பு
பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் உப பொலிஸ்
பரிசோதகர் உட்பட மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம்
இன்று ஞாயிற்றுக்கிழமை (1) நள்ளிரவு ஒரு மணியளவில் நீர்கொழும்பு கதிரானை எரிபொருள் நிரப்பு
நிலையம் அருகில் இடம்பெற்றுள்ளது.
இந்த
விபத்து சம்பவத்தில் நீர்கொழும்பு பொலிஸ்
நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத் முதியான்சலாகே ஹெரந்த தயசான்
ஜயரத்ன (26 வயது) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே சம்பவ இடத்தில்
பலியானவராவார். இவர் பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்திய உப பொலிஸ்
பரிசோதகர் மதுசான் டயஸ் (23 வயது) படுகாயமடைந்த
நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம்
தொடர்பாக பொலிஸார் தெரிவித்ததாவது,
சுற்றிவளைப்பொன்றை
மேற்கொண்டுவிட்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நள்ளிரவு ஒரு மணியளவில் பொலிஸ்
நிலையம் நோக்கி திரும்பியுள்ளனர். இதன்
போது நீர்கொழும்பு கதிரானை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் வைத்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் பொலிஸார்
பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளது.
சம்பவத்தில்
பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிளை
செலுத்த பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்ததுடன் பின்னால் அமர்ந்து வந்த
உத்தியோகத்தரே மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் இறந்தவர் கந்தளாய் , வான்எல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இதேவேளை, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த கீனவின்ன, தூனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த மல்லவராச்சிகே ரணித்த லக்சான் என்பவர்
படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் பயணித்த மற்றைய நபர் நீர்கொழும்பு
மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த
சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment