அசலக்க பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றில்
அமைந்துள்ள கூட்டுறவு பெற்றோல் நிரப்பு நிலையமொன்றில் பதினேழரை இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட
இருவரை கொச்சிக்கடை பொலிஸார் கைதுள்ளதாக
இன்று தெரிவி;த்தனர்.
நீரகொழும்பு,
போருதொட்ட
பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர். சந்தேக
நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா
கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது.
சந்தேக நபர்கள்
பணத்தை அதிகளவு செலவு செய்வதை அவதானித்த பொலிஸார் அவர்களை விசாரணை செய்துள்ளனர். இதன் போது
சந்தேக நபர்கள் தாம் மேற்கொண்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பான தகவல்ளை
தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள்
இருவரும் அசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
பிரதேசமொன்றில் அமைந்துள்ள கூட்டுறவு பெற்றோல் நிரப்பு நிலையமொன்றின்
காவலாளிக்கு தூக்க மாத்திரைகள்
கலக்கப்பட்ட சாராயத்தை குடிக்க கொடுத்துள்ளனர். காவலாளி போதையில் ஆழ்ந்த நித்திரையான பின்னர்
அங்கிருந்த பணப் பெட்டகத்தை அவர்கள்
திருடிச் சென்றுள்ளனர். அந்தப் பெட்டகத்தில் பதினேழு இலட்சத்து 40 ஆயிரத்து 577 ரூபா பணம் இருந்துள்ளது.
சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட பணத்தை
செலவு செய்துள்ள நிலையில் அந்தப் பணத்தில்
இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவை பொலிஸார்
மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment