நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின்
இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில்
(24.02.2016) கல்லூரி அதிபர் திரு என்.புவனேஸ்வரராஜா தலைமையில் பாடசாலை மைதானத்தில்;
நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேல்மாகாண ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன்
அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு
கே.ஏ.சி. பெர்ணான்டோ, நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சதீஸ்மோகன் ஆகியோர் கலந்து
சிறப்பித்தனர்.
கல்லூரி அதிபரால் ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன் அழைத்து வரப்படுவதையும், ஆளுனர் பொன்னாடைப் போர்த்தி
கௌரவிக்கப்படுவதையும், உரையாற்றுவதையும், அதிதிகளால் கொடிகள் ஏற்றிவைக்கப்படுவதையும், மாணவர்கள் உடற்பயிற்சி கண்காட்சியில் ஈடுபடுவதையும்
பாண்ட் வாத்தியம் இசைப்பதையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment