நீர்கொழும்பு Air Boys கிரிக்கட் கழகம் ஏற்பாடு செய்த
மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை
(27-02-2016 ) அன்று நீர்கொழும்பு கடோல்கலே
விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் , இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்
ரவீந்திர புஷ்பகுமார, தொழிலதிபர் சிவலிங்கம்,
ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர் சசிகுமார் , உப செயலாளர் இசக்கி குமார், நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து
மத்திய கல்லூரியின் அதிபர் புவனேஸ்வர ராஜா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
இந்த
சுற்றுப் போட்டி அணிக்கு ஆறு பேர் கொண்டதாகவும்
ஐந்து ஓவர்களைக் கொண்டதாகவும் நடைபெற்றது. 16 அணிகள் போட்டியில் மோதின. ஒவ்வொரு அணியிலும் இடம்பெறும் ஆறு வீரகளில் ஐந்து வீரர்கள் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின்
பழைய மாணவர்களாக இருக்க வெண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன.
இந்தச்
சுற்றுப் போட்டியில் Vodafone
Cricket Club வெற்றி பெற்று
வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது. Air
Boys கழகம்
இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.
இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக சதீஸ் தர்சன், சிறந்த
பந்து வீச்சாளராக முஸ்ரிப், சுற்றுப்பொட்டியின் சிறப்பாட்டக்காரராக பெனாட் மோசஸ் (Air
Boys) ஆகியோர் தெரிவாகினர்.
வெற்றிபெற்ற
அணியின் தவைர் சதீஸ் தர்சனுக்கு விஜயரத்தினம்
இந்து மத்திய கல்லூரியின் அதிபர் புவனேஸ்வர ராஜா, தொழிலதிபர் சிவலிங்கம் ஆகியோர் வெற்றிக்கிண்ணம்
வழங்குவதையும், இரண்டாமிடம் பெற்ற அணியின் தலைவர் சரண் ராஜுக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின்
கம்பஹா மாவட்ட செயலாளர் சசிகுமார் கிண்ணம் வழங்குவதையும், வெற்றி பெற்ற அணிகளையும்,
அதிதிகளையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment