Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, June 17, 2018

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியின் உத்தரவுக்கு அமைய போதைப் பொருள் விநியோகம் செய்து வந்த நபர் கைது: 25 இலட்சம் ரூபா பெறுமதியான 122 கிராம் ஹெரோயின் கைப்பற்றல்


 25 இலட்சம் ரூபா பெறுமதியான 122 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை  நீர்கொழும்பில் வைத்து  நேற்று சனிக்கிழமை கைது செய்யதள்ளதாக நீர்கொழும்பு ஊழல் ஒழிப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபராவார். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபர் போதைப் பொருளை விநியோகிப்பதற்காக சென்று கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து போதைப் பொருட்களையும், போதைப் பொருள் விநியோகம் செய்வதறகு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும்
மூன்று செல்லிடத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்  தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த துசார  என்பவரின் உதவியாளராவார். தங்கொட்டுவ துசார என்பவர் கொலை குற்றச்சாட்டின் பேரில் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவராவார்.  போதைப் பொருள் தேவயுடையவர்கள் சிறைச்சாலையில் உள்ள துசாரவுக்கு 'ஈஸி கேஸ்' மூலமாக பணத்தை அனுப்பியவுடன் , துசார கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு போதைப் பொருளை விநியோகிக்க வேண்டிய இடத்தை குறிப்பிடுவார். சந்தேக நபர்  அதன்படி செயற்பட்டுள்ளார்.


இதன்போது சந்தேக நபர் நேரடியாகப் போதைப் பொருளை கொள்வனவு செய்பவர்களிடம் ஒப்படைக்காமல் துசார குறிப்பிடும் இடத்தில் போதைப் பொருளை வைத்துவிடுவார். கொள்வனவு செய்பவர் அந்த இடத்திலிருந்து போதைப் பொருளை எடுத்துக் கொள்வார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் போதைப் பொருளை விநியோகம் செய்வதற்காக மனைவியின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியுள்ளார். நீர்கொழும்பு , கட்டானை, திவுலபிட்டிய, மீரிகம உட்பட பல பிரதேசங்களுக்கு சந்தேக நபர் போதைப் பொருளை விநியோகம் செய்து வந்துள்ளதாகவும், கொழும்பு  கிரேன்ட்பாஸ் பகுதியிலிருந்து  சந்தேக நபருக்கு விநியோகம் செய்வதற்கான போதைப் பொருளை தங்கொட்டுவ துசாரவின் உத்தரவின்பேரில் கிடைத்துள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.
 சந்தேக நபரை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவி;த்தனர்.


No comments:

Post a Comment