Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, June 17, 2018

நீர்கொழும்பு , ஜா – எல பிரதேசங்களில் வங்கி ஏ.ரி.எம் இயந்திரங்களில் 74 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது


நீர்கொழும்பில் அமைந்துள்ள  நவீன சுப்பர் மார்க்கட்டில் பொருத்தப்பட்டுள்ள ஏ.ரி.எம் இயந்திரத்திலிருந்து 47 இலட்சம் ரூபா பணத்தையும், ஜா- எல பிரதேசத்தில்; அமைந்துள்ள  வங்கியொன்றின் ஏரிம் இயந்திரத்திலிருந்து 27 இலட்சம் ரூபா பணத்தையும் சூட்சுமமான முறையில் திருடிய பிரதான சந்தேக நபரையும் அவருக்கு உதவியாக இருந்தவரையும் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான சந்தேக நபர் நீர்கொழும்பு அங்குருகாரமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞராவார். அவருக்கு உதவியாக இருந்தவரும் குரணை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பில் அமைந்துள்ள  நவீன சுப்பர் மார்க்கட்டில் பொருத்தப்பட்டுள்ள ஏ.ரி.எம் இயந்திரத்திலிருந்து 47 இலட்சம் ரூபா பணத்தை திருடிய சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ஜா- எல பிரதேசத்தில்; அமைந்துள்ள  வங்கியொன்றின் ஏரிம் இயந்திரத்திலிருந்து 27 இலட்சம் ரூபா பணத்தை திருடிய சம்பவம்  கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் திருடப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமரா காட்சிகள், சந்தேக நபர்களின் தொலைபேசி தரவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளனர். பின்னர் சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்கு மேலாக இரகசியமாக அவதானித்து  அவர்களை கைது செய்துள்ளனர்.
பிரதான சந்தேக நபர் கணினி மற்றும் டிஜிட்டல் தொழில்நுடப் அறிவுடையவராவார் எனவும், அவர் தனியார் வங்கி ஒன்றில்  முன்னர் பணியாற்றியுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் அந்த தனியார் வங்கியிலிருந்து விலகி சிறிது நாட்களிலேயே இந்த கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார்.



திருடப்பட்ட மொத்தப் பணத்தில் (74 இலட்சம் ரூபா) 35 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும்   சந்தேக நபர்கள் திருடிய பணத்தில் வாங்கிய இரண்டு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையிட்ட பணத்தில் சந்தேக நபர்கள் நகை, மோட்டார் சைக்கிள் உட்பட சில பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு  வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பு உள்ளதா என பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரின் மேற்பார்வையின் கீழ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி  உப பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ஹேரத்தின் தலைமையில்ஈ சார்ஜன்ட் நிசாந்த, கான்ஸ்டபிள்களான சரத், நிரோசன், பண்டார, திசாநாயக்க, மதுசங்கு ஆகியோரைக் கொண்ட குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களை இன்று (17) ஞாயிற்றுக்கிழமை மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment