Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, July 17, 2018

மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்லும் பெண்களின் நகைகளை கொள்ளையிட்டு வந்த இருவர் மக்களின் உதவியுடன் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது 120 கிரேம் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் கைப்பற்றல்


மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்லும் பெண்களின் நகைகளை கொள்ளையிட்டு வந்த  இருவரை  பொது மக்களின் உதவியுடன்  கைது செய்துள்ளதாகவும் , கொள்ளையிடப்பட்ட நகைகளில் 15 பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாதகவும் நீர்கொழும்பு ஊழல் ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இன்று  (17) தெரிவித்தனர்.
பமுனுகம, போப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 34 வயது மற்றும் 40 வயதுடைய இரு நபர்களே நேற்று திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ள  சந்தேக நபர்களாவர்.  சந்தேக நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்
என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.



 34 வயதுடைய நபர் இதற்கு முன்னர் 18 தங்கச் சங்;கிலிகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும், ரயிலில் பயணிக்கும் பெண்களின் நகைகளை   கொள்ளையிட்ட சம்பம் தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
40 வயதுடைய சந்தேக நபர் பேலியாகொடை , வத்தளை ஆகிய பிரதேசங்களில் நகை பறிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர்களுக்கு எதிராக கொச்சிக்கடை, கட்டுநாயக்க, சீதுவை, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் 10 வழக்குகள் தொடரப்பட்டுள்ளமையும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்கள் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் தாம் கொள்ளையிட்ட நகைகளை ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அடகு வைத்துள்ளனர். அந்த நபர் நீர்கொழும்பு , வத்தளை ஆகிய பிரதேசங்களில் உள்ள  நகை அடகு வைப்பு நிலையங்களில் அந்த நகைகளை கூடுதலான விலைக்கு அடகு வைத்துள்ளார்.
சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment