Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, July 8, 2018

மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வது போன்று நடித்து திருடி விற்பனை செய்த நபர் கைது: 13 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்


 மோட்டார் சைக்கிள் விற்பனை  தொடர்பான இணையத்தளங்களில் இடம்பெறும் விளம்பரங்களை பார்வையிட்டு  விளம்பரங்களை வெளியிட்ட நபர்களின் வீடுகளுக்குச்  சென்று மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வது போன்று நடித்து ஏமாற்றி அந்த மோட்டார் சைக்கிள்களை கடத்திச் சென்று விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை  கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை பொலிஸார் நேற்று சனிக்கிழமை  (7) கட்டானை கந்தவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாகவும், சந்தேக நபர் 27 வயதுடைய  கட்டானை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் திருடி விற்னை செய்த 14 மோட்டார் சைக்கிள்களில் 13 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவற்றின் மொத்த பெறுமதி 35 இலட்சம் ரூபாவாகும்.
இதுதொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,


சந்தேக நபர் இணையத்தளங்களில் இடம்பெறும் விளம்பரங்களை பார்வையிட்டு  விளம்பரங்களை வெளியிட்ட நபர்களின் வீடுகளுக்குச்  சென்று மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்வது போன்று நடித்து, மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை பெற்றுக்கொண்டு , மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்ப்பது போன்று நடித்து கடத்திச் சென்றுள்ளார்.
பின்னர் அவற்றை மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்படும் நிலையங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். 2017 ஆம் ஆண்டிலிருந்து சந்தேக நபர் இந்த குற்றச் செயலை செய்து வந்துள்ளார். நீர்கொழும்பு, சிலாபம், கொச்சிக்கடை, மினுவாங்கொடை, திவுலப்பிட்டி உட்பட நீர்கொழும்பு நகருக்கு அண்மித்த பிரதேசங்களிலிருந்து பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.





சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள்களை வாங்கிய மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் அவற்றை விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் திருடப்பட்ட  14 மோட்டார் சைக்கிள்களில் 13 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபiர் இன்று மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

No comments:

Post a Comment