ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான கூரைத் தகடுளை திருடி விற்பனை செய்த அறுவர் கைது
நீர்கொழும்பு கடற்ரைத்தெருவில் உள்ள கூரைத் தகடுளை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான கூரைத் தகடுளை திருடி விற்பனை செய்தமை தொடர்பாக ஆறு பேரை நீர்கொழும்பு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அந்த தொழிற்சாலையின் முகாமையாளர்,முன்னாள் விநியோகப் பிரதிநிதி, தொழிற்சாலையின் நான்கு ஊழியர்கள் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர்.சந்தேக நபர்கள் கடந்த ஒரு வருட காலமாக தகடுளை திருடி பல்வேறு இடங்களுக்கு விற்னை செய்து வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
15 இலட்சம் ரூபா பெறுமதியான தகடுளை லொறி ஒன்றில் ஏற்றி தொழிற்சாலையிலிருந்து கொண்டு சென்று கொண்டுருக்கும்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
.
No comments:
Post a Comment