மூன்றாவது ஆசிய
இளைஞர் விளையாட்டு விழாவை 2017 ஆம் ஆண்டு நடத்துவதற்கான நாடாக இலங்கை
தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இவ்விளையாட்டு விழா
நடத்தப்படவுள்ளது.
இலங்கை
வந்துள்ளஆசிய ஒலிம்பிக் பேரவையின் தலைவர் இளவரசர் ஷேக் அஹமட் பாட் அல் ஸபான்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து
கலந்துரையாடியதன் பின்னர் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ளஆசிய ஒலிம்பிக் பேரவையின் தலைவர் 1991
ஆம் ஆண்டு முதல், ஆசிய ஒலிம்பிக் பேரவையின் தலைவராக செயற்பட்டு வருகிறார். இளவரசர்
அல் ஸபான், குவைட்டின் தகவல் மற்றும் எண்ணெய் வள அமைச்சராக செயற்பட்டுள்ளதுடன்,
ஆசிய விளையாட்டு பேரவை மற்றும் ஆசிய கைப்பந்து சங்கத்தின் தலைவராகவும்
பணியாற்றுகின்றார்.
No comments:
Post a Comment