தாம் பணியாற்றும் ஆடைத்
தொழிற்சாலையில் உணவு உட்கொண்டதன் பின்னர்
சுகயீனமுற்ற நிலையில் கட்டுநாயக்கா ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலர்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாiயில் நேற்று வெள்ளிக்கிழமை காலை சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.
கட்டுநாயக்காவில் அமைந்துள்ள 'நெக்ஸ்ட்' ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த
150 இற்கும் மேற்பட்ட யுவதிகளும்
இளைஞர்களுமே வாந்தி மற்றும் வயிற்றுளைவு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டவர்களாவர்.
இவர்களில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.
தொழிற்சாலையில் நேற்று வியாழக்கிழமை பகல் மற்றும் இரவு உணவு
உட்கொண்டவர்களே பாதிப்புற்றுள்ளதாக தெரிய
வருகிறது.
150 இற்கும் மேற்பட்டவர்கள்
வெளிநோயாளர் பிரிவில் சிக்pச்சைப் பெற்றதாகவும் 20 இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை பகல் மற்றும் இரவு உணவை சாப்பிட்ட
பிறகு நோயுற்றதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள்
சிலர் தெரிவித்தனர்.
சிகிச்சைப் பெற்ற ஊழியர்கள் பலர் குறித்த ஆடைத்
தொழிற்சாலையின்; பொறுப்புதாரிகளாலும் சக
ஊழியர்களாலும் வாகனங்களில் பின்னர்
அழைத்துச் செல்லப்பட்டனர்
No comments:
Post a Comment