Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, September 5, 2014

ஐ.நா.வின் ஆணையகத்தின் ஊடாக புகலிடம் கோரியுள்ள பாகிஸ்தானியர்களை கைது செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

 அகதிகளுக்கான ஐ.நா.வின் ஆணையகத்தின் ஊடாக  புகலிடம் கோரிய நிலையில் நீரகொழும்பில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் கடந்த  புதன்கிழமை (3) முதல் மீண்டும் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று நீர்கொழும்பில் உள்ள பாகிஸ்தானியர்கள் தெரிவித்தனர்.
கடந்த புதன்கிழமை முதல் பலர் கைது செய்யப்பட்டுவருவதாகவும், அவர்கள் மிரிஹானையில் உள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டு தினமும் பத்து பேர் கொண்ட குழுவாக பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பட்டு வருவதாகவும், நேற்று வியாழக்கிழமையும் பத்து பேர் திருப்பி அனுப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கடந்த ஜுன் மாதம் 9 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டு பூஸாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 56 பாகிஸ்தானியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (2-9-2014) நீர்கொழும்பில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர். மீண்டும் புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது செய்யப்படுவது ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தங்கியுள்ள பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களை, நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த  திங்கட்கிழமை  (1) நீக்கப்பட்டது.
இலங்கையில் அடைக்கலம் கோரியுள்ள பாகிஸ்தானிய பெண்ணான அனீலா இம்ரான் தாக்கல் செய்திருந்த மனுமீதான வாதப்பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.

அகதிகளுக்கான ஐ.நா. வின் ஆணையகத்தின் ஆட்சேபங்களையும் பொருட்படுத்தாது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் புகலிட கோரிக்கையாளர்கள் மீது அரசாங்கம் கடுமையாக நடந்துகொண்டதாகவும் 200 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியதை தொடர்ந்து இவர், ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment