தாம்
பணியாற்றும் ஆடைத் தொழிற்சாலையில் உணவு உட்கொண்டதன் பின்னர் சுகயீனமுற்ற நிலையில் நீர்கொழும்பு மாவட்ட
வைத்தியசாலை கடந்த வெள்ளிக்கிழமை காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கட்டுநாயக்கா
ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர்களில்
ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல்
சிகிச்சை பலனின்றி மரணமானார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சைப்
பெற்று வந்த ஞானவதி களுவாராச்சி என்ற 48 வயதுடைய ஊழியரே மரணமானவாராவார். இவர்; தங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கட்டுநாயக்காவில் அமைந்துள்ள 'நெக்ஸ்ட்' ஆடைத் தொழிற்சாலையைச் ஊழியர்களே வாந்தி மற்றும் வயிற்றுளைவு ஏற்பட்ட நிலையில்
கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு
சிகிச்சைக்காக அழைத்து
வரப்பட்;டவர்களாவர்.
தாம்
தொழிற்சாலையில் கடந்த வியாழக்கிழமை பகல் மற்றும் இரவு வேளை உணவை சாப்பிட்ட பிறகு
நோயுற்றதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலர்
தெரிவித்தனர்.
ஊழியர்களில் பத்துக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்தும்
சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, நீர்கொழும்பு முன்னக்கரை பிரதேசத்தைச் சேர்ந்த
ஒருவரே குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு உணவு வழங்கி வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment