நீர்கொழும்பு மீனவர்கள் கடந்த ஜுன் மாதம் நடத்திய
எரிபொருள் மானியம் தொடர்பான போராட்டத்தின் போது ஜனாதிபதி அவர்கள் கொழும்பு
மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம்
ரஞ்சித்திடம் வாக்குறுதி அளித்தபடி இந்த மாதம் (செப்டம்பர் மாதம்) முதல்
மண்ணெண்ணெய் விலையை
குறைக்கப்படாமையினாலும்.தமது எழுத்து மூல கடிதத்திற்கு உரிய பதில்
பிடைக்காமையினாலும் இந்த மாத இறுதியில் மாபெரும் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக
நீர்கொழும்பு மீனவ சங்கங்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஊடகவியலாளர்
சந்திப்பின் போது தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு
நீர்கொழும்பு ,குடாப்பாடு ஐக்கிய மீனவ சங்க காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (6) மாலை இடம்பெற்றது.
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆயினும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலையை 25 ரூபாவால் குறைக்க வேண்டும். இல்லையேல் சிறு மீன்
பிடித்துறை மீனவர்கள் தொடர்ந்தும் தொழில்
செய்ய முடியாத நிலை ஏற்படும்; மீனவ சங்க பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக இரண்டு தடைவைகள் பேச்சு வார்த்தை
நடத்தப்பட்டுள்ளதாகவும், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்
மெல்கம் ரஞ்சித் ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளதாகவும், இந்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சாதகமான பதில் கிடைக்காவிடில், இந்த மாத இறுதியில் சகல மீனவ சங்கங்களும் இணைந்து இரண்டாவது கட்டமாக மாபெரும்
போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும்
அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அரசாங்கம் வாக்குறுதி அளித்படி கடந்த 13 மாத காலமாக வழங்கப்படாதுள்ள
மண்ணெண்ணெய் மானியத்தை தொடர்ந்து வழங்குமாறும், இதுவரை வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை வழங்குமாறும் கோரி நீர்கொழும்பு சிறு மீன் பிடித்துறை மீனவர்கள்
கடந் ஜுன் மாதம் 16 ஆம் திகதி ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நீர்கொழும்பு
மாநகர சபை முன்றலில் சத்தியாகிரகப் போராட்டத்தையும், உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினர். உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வந்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் போராட்டததில் ஈடுபடும்
மீனவ்ரக்ளையும் மீனவர் சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்
போது, ஜனாதிபதியுடன் இந்த பிரச்சினை தொடர்பாக உரையாடி உள்ளதாகவும், செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தீர்வொன்றை பெற்றுத் தருவதாக உறுதி
அளித்தள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் தமது உண்ணாவிரதப்
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment