நீர்கொழும்பு கடற்கரை வீதி
கடற்கரையோரப் புகுதியில் இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
நீர்கொழும்பு பெலிஸார் தெரிவித்தனர்.
பெரியமுல்ல. அபேசிங்கபுர
பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்து உசாந்த என்ற 20
வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
நேற்று சனிக்கிழமை காலை 11.30
மணியளவில் இளைஞரின் சடலம் கடலோரத்தில் இருப்பதாக உநவினர் ஒருவருக்கு கிடைத்த தகவலை
அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இளைஞரின்
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மரணமடைந்த இளைஞரின் சகோதர முறையான ஒருவர் திடீர் மரண
விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலமளித்துள்ளார்.
பெரியமுல்லை. அபேசிங்கபுர
பிரதேசத்தைச் சேர்ந்த பிரசன் அப்புஹாமி என்பவரே இவ்வாறு குறித்த மரணத்தில்
சந்தேகம் தெரிவித்துள்ளவராவார்.
சம்பவம் இடம்பெற்ற அன்று தனது
சகோதரர் பணம் வைத்திருந்ததாகவும், இதன் காரணமாக மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சாட்சியம் அளிக்கையில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு
பொலிஸார் ஏத்துக்கால சுற்றலாத்துறை பொலிஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்
No comments:
Post a Comment