நீர்கொழும்பு பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள்
திணைக்களத்துடன் இணைந்து பிரதேச சாகித்திய கலா மகோற்சவத்திற்காக நடத்திய இலக்கியப்
போட்டி நிகழ்ச்சிகளில் ஊடகவியலாளரும்
கவிஞரும் எழுத்தாளருமான எம்.இஸட்.ஷாஜஹானுக்கு (கலாநெஞ்சன்) நான்கு
பரிசில்கள் கிடைத்துள்ளன.
கவிதை மற்றும்
சிறுவர் சிறுவர் கதை ஆக்கப் போட்டிகளில்
முதலாமிடங்களையும், பாடலாக்கம் மற்றும் சிறுகதைப்
போட்டிகளில் இரண்டாமிடங்களையும் இவர் பெற்றுள்ளார். அத்துடன் கம்பஹா மாவட்ட
செயலகம் கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து மாவட்ட சாகித்திய கலா மகோற்சவத்திற்காக
நடத்திய இலக்கியப் போட் நிகழ்ச்சிகளிலும்
ஜனாப் ஷாஜஹானுக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. கம்பஹா மாவட்ட போட்டியில்
சிறுவர் கதை ஆக்கப் போட்டியில் முதலாமிடத்தையும்,
கவிதை ஆக்கப்
போட்டியில் இரண்டாமிடத்தையும் இவர் பெற்றுள்ளார்.
கலாநெஞ்சன் ஷாஜஹன் என்ற பெயரில் எழுதி வரும் இவர் இரண்டு
கவிதைத் தொகுதிகளையும், இஸ்லாமியப் பாடல் தொகுதிகள் இரண்டினையும் வெளியிட்டுள்ளதோடு, பல்வேறு இலக்கியப் போட்டிகளில் தேசிய ரீதியில் பல
பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
கல்விமாணி பட்டம் , கல்வி முதுமாணிப் பட்டம்
(தேசிய கல்வி நிருவகம்),
இதழியல் துறையில் டிப்ளோமா (கொழும்பு பல்கலைகழகம்),
மனித உரிமைகள்
தொடர்பான டிப்ளோமா, கணனித் துறையில் டிப்ளோமா என்பவற்றையும் ஜனாப் எம். இஸட்.
ஷாஜஹான் ஏற்கனவே பெற்றுள்ளார். அத்துடன் இவர் சமாதான நீதவானாகவும் உள்ளார்.
கொழும்பு ஹமீத் ஹல் ஹுசைனி தேசியக் கல்லூரி. மருதானை
ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான
ஜனாப் ஷாஜஹான் இலக்கியம் மற்றும் சமூக சேவை பங்களிப்புக்காக 'சாமஸ்ரீ தேச கீர்த்தி', 'கவியத் தீபம்', 'காவிய பிரதீப' ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் . மேலும் மேலும் வளர்ச்சிகள் கிட்டட்டும்
ReplyDelete