ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு
கிலோகிராம் தங்கத்துடன் கட்டு:நாயக்;கா விமான நிலையத்தில் ஒருவரை கைது செய்ததாக கட்டுநாயக்கா போதைப் பொருள் ஒழிப்புப்; பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிமை காலை 7.30 மணியளவில் டுபாயிலிருந்து
இலங்கை வந்த யு.எல் 226 விமானத்தில் பயணித்த
பயணியிடமிருந்தே இரண்டு கிலோகிராம் நிறை கொண்ட தங்கக் கட்டிகள் 20 கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவரே சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கத்தை
கடத்தி வந்த போது கைது செய்யப்பட்டவராவார்.
போதைப் பொருள் ஒழிப்புப்; பிரிவு பொலிஸாருக்குக்
கிடைத்த தகவல் ஒன்;றை அடுத்து சந்தேக நபரை சோதனை
செய்த போது அவர் அணிந்திருந்த இடுப்புப் பட்டியில் (பெல்ட்) சூட்சுமமான முறையில்
மறைத்து வைக்கப்பட்ட நிலையில் தங்கக்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் உப பொலிஸ்
பரிசோதகர்களான ; ருவன் குமார, ஜயரத்ன, பொலிஸ் சாஜன்ட திசாநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களைக்
கொண்ட குழுவினர் சநதேக நபரை கைது செய்ததுடன் ஒரு
கோடி ரூபா பெறுமதியான இரண்டு கிலோகிராம் தங்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment