நீர்கொழும்பு சிறு மீன்பிடித்துறை மீனவர்கள் கடந்த மூன்று
தினங்களாக கடலுக்குச் செல்லாமல்
நடத்திய பகிஸ்கரிப்பு போராட்டம் இன்று புதன்கிழமை
இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, பிரதான வீதியில் அமைந்துள்ள ஜுப்பலி மண்டபத்தில் இன்று
முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பேதே இரு தரப்பினரும் இந்த
இணக்கப்பாட்டுக்கு வந்தனர். அருட் தந்தை பெட்ரிக் பெரேரா தலைமையிலான கத்தோலிக்க
மதத் தலைவர்களின் ஏற்பாட்டில்
நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது மீன்
பிடித்துறை பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன,
மேல் மாகாண அமைச்சர்
நிமல்லான்ஸா ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
கடற்கரைத் தெரு - குடாப்பாடு ஐக்கிய மீனவர் சங்கத்தைச்
சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகளையும், கருவாட்டுத் தயாரிப்பில்
ஈடுபட்டுள்ளோரின் பகிரதிநிதிகளையும் அழைத்து பேச்சுவார்ததை நடத்தப்பட்டது.
இதன்போது இரு
தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. நிலைமையை சமாளிக்க
பொலிஸார் தலையிட்டனர்.
பிற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மீன்கள் நீர்கொழும்பு
கொட்டுவை மைதானம்; அருகில் கருவாட்டுத்
தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு; விற்பனை செய்யப்படுவதற்கும்
எதிர்ப்புத் தெரிவித்தே கடந்த மூன்று தினங்களாக
எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
இது தொடர்பாக கடற்கரைத் தெரு - குடாப்பாடு ஐக்கிய மீனவர்
சங்கத்தைச் சேர்ந்த யூட் என்ற மீனவர் தெரிவி;க்கையில்,
எமது சங்கத்தைச் சேர்ந்த ஆறாயிரத்துக்கும் அதிகமான சிறு
மீன் பிடித்துறை மீனவர்கள் கடந்த மூன்று தினங்களாக தொழிலுக்குச் செல்லவில்லை. 3000 படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. பல
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
காலி , மாத்தறை , அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளிலிருந்து எமது நகருக்கு
மீன்கள் கொண்டு வந்து குறைந்த விலையில் கருவாட்டுக்காக விற்பனை செய்யப்படுகின்றன.
இதனை இங்குள்ள சிந்தாத்தி கருவாட்டுச் சஙகத்தினர் கொள்வனவு செய்கின்றனர். இந்த
சங்கத்தை ஆரம்பிப்பதற்கு நாஙகளே உதவி புரிந்தோம். பத்தாயரம்; ரூபா கடன் வழங்கினோம். ஏனைய வசதிகளைச் செய்து கொடுத்தோம். ஆனால் இந்த
கருவாட்டுச் சங்கத்தினர் எமது மீன்ககளை கொள்வனவு செய்யாமல் பிற மாவட்டத்திலிருந்து
குறைந்த விலையில் மீன்களை கொள்வனவு செய்கின்றனர்.
இது தொடர்பாக நாங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம்
10 ஆம் திகதி முல் நான்கு
தினங்கள் கடலுக்குச் செல்லாமல் பகிஸ்கரிப்புச் செய்தோம். இதன்போது மீன் பிடித்துறை
பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன தெற்கிலிருந்து இனிமேல் மீன் கொண்டு
வரப்படமாட்டாது என்று வாக்குறுதி அளித்தார். ஆயினும், அவ்வாறு நடைபெறவில்லை.
நாங்கள் பிடிக்கும் மீன்கள் பிடிக்கப்பட்டு ஆறு
மணித்தியாலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. தெற்கிலிருந்து வரும் மீன்கள் ஒரு
மாதத்திற்கு மேலாக குளிரூட்டியில் வைக்கப்பட்ட பின்னரே இங்கு கொண்டு வந்து குறைந்த
விலைக்கு விற்கப்படுகிறது. கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்
நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது பிற மாவட்டங்களிலிருந்து இன்னொரு
பிரதேசத்திற்கு மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என்று
உத்தரவிட்டார். ஆயினும், அவ்வாறு நடைபெறவில்லை.
இதேவேளை, இன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்படவுள்ள பேச்சுவார்த்தை
மூலமாக இன்னும் ஒரு வாரத்தில் இது
தொடர்பாக தீர்வொன்றுக்கு வர இருப்பதாக அங்கு கூறப்பட்டது, அது வரையில்’ இன்னும் ஒரு வாரத்திற்கு பிற இடங்களிலிருந்து மீன்களை கொள்வனவு
செய்வதில்லை என்று கருவாட்டுத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்
இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.
இதனை அடுத்து மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல
முடிவெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment