Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, November 5, 2018

நீர்கொழும்பு நகரில் தீபாவளி விசேட பூஜையும் கலை நிகழ்ச்சியும் (PHOTOS)


 நீர்கொழும்பு நகரில்  வாழும் இந்து மக்கள் அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடினர். நகரில் அமைந்துள்ள கோயில்களில் இன்று (6)  காலை விசேட பூஜைகள் இடம்பெற்றன.
நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில்  சிவஸ்ரீ குகேஸ்வர குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் இடம்பெற்றன. இதேவேளை, நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின்  விஜயசக்தி இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று (6-11-2018) இன்று காலை தீபாவளி  விசேட பூஜையும் கலை நிகழ்வும் இடம்பெற்றது.

கல்லூரியில் அமைந்துள்ள ஞான விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.  தீபாவளி  கொண்டாட்டம் தொடர்பான மாணவர்களின்  கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் நிகழ்வில் இடம்பெற்றன.
ஆசிரியை திருமதி காந்த ரூபி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.


 சித்திவிநாயகர் ஆலயத்தில்.......






நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி.......














No comments:

Post a Comment