சட்ட ரீதியற்ற கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளிநாடு செல்ல
முற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல்
செய்யப்பட்ட வழக்கு இன்று வியாழக்கிழமை(8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவம்
தொடர்பான தரவு சாட்சிகளை பரிசீலிப்பதற்காக அடுத்தவருடம் (2017) பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதிக்கு இந்த வழக்கை
நீர்கொழும்பு மேலதிக நீதவான் துஸஸந்த எப்பிட்டவல ஒத்திவைத்தார்.
முறையற்ற கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பாராளுமன்ற
உறுப்பினர் விமல் வீரவங்ச வெளிநாடு செல்ல வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில்
வைத்து 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடு செல்வதற்காக பல வருடகாலமாக தான் பயன்படுத்தி வந்த கடவுச்சீட்டு காணாமல் போனதாக
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, பின்னர்
புதிய கடவுச் சீட்டைப் பெற்றுள்ளதோடு பழைய கடவுச்சீட்டை ரத்துச் செய்துள்ளார். பின்னர்
2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் வந்தபோது காணாமல் போனதாகக்
கூறப்பட்ட கடவுச் சீட்டை அவர் சமர்ப்பித்துள்ளார்
என கூறப்படுகிறது.
படம்: பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தை
விட்டு சட்டத்தரணிகளுடன் வெளியேறும் காட்சி

No comments:
Post a Comment