273 ஆம் இலக்க பஸ் பயணிக்கும் நீர்கொழும்பு – ஜா-எல
வீதியில் அதிக மதுபோதையில் வாகனத்தை அதிக வேகத்தில்
செலுத்தி நீர்கொழும்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள்கள்
இருவர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த
காரின் சாரதியின் சார்பில் விடுக்கப்பட்ட பிணை கோரிக்கையை மூன்றாவது தடைவையும் நிராகரித்த நீர்கொழும்பு மேலதிக
நீதவான் கபில துஸ்ஸந்த டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு
கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்ஸ இந்திரஜித்
வடுகே (24 வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்ரவிடப்பட்டவராவார்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மரணமான ஒரு பொலிஸ்
உத்தியோகத்தருக்கு 5 இலட்சம் ரூபா வீதம் இரண்டு உத்தியோகத்தர்களுக்கும் பத்து இலட்சம்
ரூபா வழங்குமாறும் , ஐந்து இலட்சம் ரூபா பணத்தில் இரண்டு இலட்சம் ரூபாவை வழக்கு இடம்பெற்ற
25 ஆம் திகதி அன்று வழங்குமாறும் மிகுதிப் பணத்தை அடுத்த வழக்கு திகதிக்கு முன்னர்
வழங்குமாறும் சந்தேக நபருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment