கட்டானை பிரதேசத்தில் சொகுசு வீடொன்றில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பு நிலையத்தை நடத்தி வந்த இருவருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான
கபிபல துஸ்ஸந்த எபிட்டவல தலா 5 இலட்சம் ரூபா
அபராதம் விதித்தார்.
கட்டானை கொன்கொஸ் சந்தியைச் சேர்ந்த
பெட்ரீஸியா பெரேரா, தெமங் சந்தியைச் சேர்ந்த அக்கலங்க சில்வா ஆகியோரே அபராதத் தொகை விதிக்கப்பட்டவர்களாவர்.
பிரதிவாதிகள் இருவரும் இதற்கு முன்னரும் குற்றச் செயல் புரிந்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களாவர்.
கட்டானை பிரதேசத்தில் சொகுசு வீடொன்றில் பிரதிவாதிகளால் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோதமாக
கசிப்பு தயாரிப்பு நிலையத்தை நீர்கொழும்பு
பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) சுற்றி வளைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு
பெரும் தொகையான மதுபானத்தையும் உபகரணங்களையும் -கைப்பற்றியிருந்தனர்.
-
No comments:
Post a Comment