Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, September 8, 2016

நீர்கொழும்பில் நடைபெற்ற கம்பஹா மாவட்ட சுனாமி எச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு

  நாடளாவிய ரீதியில் சகல மாவட்டங்களிலும் நேற்று புதன்கிழமை (7) காலை சுனாமி எச்சரிக்கை நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சுனாமி எச்சரிக்கை கோபுரத்தில் அபாய ஒலி எழுப்பி மக்களுக்கு சனாமி தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கம்பஹா  மாவட்ட சுனாமி எச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தில் நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கம்பஹா மாவட்ட பிரிவின் உதவிப் பணிப்பாளர் அஜித் நிசாந்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொச்சிக்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தர்ம கீர்த்தி ,  ஏத்துக்கால உல்லாசப் பயணத்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ,  தூவ கடற்படை  பிரிவின் பொறுப்பதிகாரி கொமான்டர் பி.எச்.எஸ்.எஸ். அப்புஹாமி ,நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர். அலவத்த,  உட்பட பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டனர்.








படவிளக்கம்- அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கம்பஹா மாவட்ட பிரிவின் உதவிப் பணிப்பாளர் அஜித் நிசாந்த உரையாற்றுவதையும், கலந்து கொண்ட  அதிகாரிகளையும் பொது மக்களையும் படங்களில் காணலாம். 

No comments:

Post a Comment