Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, June 25, 2016

5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  ஆறு கோடி  ரூபா பெறுமதியான 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜை  ஒருவர் சனிக்கிழமை (25) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
QR 668  இலக்கமுடைய கட்டார் விமான  சேவையைச் சேர்ந்த விமானத்தில்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த  ரவுன்;டட் கான (44 வயது) என்பவரே கைது செய்யப்பட்டவராவார்.

சந்தேக நபர் தனது பயணப் பொதியில் 5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை  சூடசுமமான முறையில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் விமான நிலையத்தில் சுங்க  சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வெளியேறும்போதே பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாகிஸ்தான் பிரஜை பாகிஸ்தானிலிருந்து  டோஹா கட்டார் சென்று அங்கிருந்து  சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வநதடைந்துள்ளார.   சந்தேக நபர் இதற்கு முன்னரும் பல தடைவைகள்  போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர்  ஜகத் ரோஹன ஆகியோரின் ஆலோசனையின் பேரில்  கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர்  எஸ்.ஜி.ஜி. கருணாரத்னவின் தலைமையில்  பொலிஸ் பரிசோதகர் எச்.எஸ்.பெரேரா, பொலிஸ் கான்ஸ்டபிள்களான அனில், சுமித், ரங்க, தம்மிக்க ஆகியோர் சந்தேக நபரை  போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.


 இதேவேளை, குறித்த பாகிஸ்தான் பிரஜையை நீர்கொழும்பு பதில் நீதவான் சாந்த நிரிஹெல்ல முன்னிலையில் சனிக்கிழமை ஆஜர் செய்தபோது மேலதிக விசாரணைக்காக  ஜுலை மாதம் முதலாம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment